ஆசியாவில் புதிய கோவிட்-19 அலை - சிங்கப்பூரில் தொற்று அதிகரிப்பு

16 வைகாசி 2025 வெள்ளி 13:12 | பார்வைகள் : 361
ஆசியாவின் பல பகுதிகளில் புதிய கோவிட்-19 அலை பரவத் தொடங்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஹொங்ஹொங் மற்றும் சிங்கப்பூர் போன்ற நகரங்களில் தொற்றுகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.
Centre for Health Protection-இன் தொற்று நோய்கள் பிரிவு தலைவர் அல்பர்ட் அவ், “நகரில் கோவிட் பரவல் தற்போது மிகவும் அதிகமாக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
மே 3 முடிவடைந்த வாரத்தில் 31 பேருக்கு தீவிர நிலை ஏற்பட்டுள்ளது. கழிவுநீரில் கண்டறியப்பட்ட கோவிட் தடங்களும், மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக்க அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம், ஒராண்டுக்கு பிறகு கோவிட் புதுப்பிப்பு அறிக்கையை மே மாதம் வெளியிட்டு, மே 3 முடிவடைந்த வாரத்தில் 28 சதவீதம் அதிகரித்து 14,200 புதிய தொற்றுகள் பதிவானதாக தெரிவித்துள்ளது.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிய வைரஸ் வகைகள் அதிகமாக பரவுவதற்கான உறுதி இல்லை என்றாலும், மக்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.
சீனாவிலும் கோவிட் பரவல் கடந்த ஐந்தாவது வாரத்திற்குள் இருமடங்காக உயர்ந்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டது. தாய்லாந்தில் ஏப்ரல் மாத சோங்க்ரான் திருவிழாவைத் தொடர்ந்து கோவிட் பரவல்கள் ஏற்பட்டுள்ளன.
சுகாதாரத்துறை, குறிப்பாக உயர் ஆபத்துள்ளவர்கள் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.