இந்து சமுத்திரத்திலும் பிரான்ஸ் - ஒரு ஆச்சரிய தகவல்..!
2 ஆனி 2016 வியாழன் 11:13 | பார்வைகள் : 19750
உலகில் உள்ள நாடுகளில் பிரான்ஸ் மட்டுமே கடல் கடந்து தனக்கான நிலப்பரப்பை அதிகம் வைத்திருக்கும் நாடு. உலகின் வெவ்வேறு பகுதிகளில் குட்டி குட்டியாய் 'பிய்த்துப்போட்ட பரோட்டா' போல் பல நிலப்பரப்பு பிரான்சுக்கு சொந்தம். அதுவும் 'பிரான்ஸ்' தான். அங்கேயும் ஜனாதிபதி பிரான்சுவோ ஓலந்து தான். அங்கேயும் பிரெஞ்சு தான் பேசுவார்கள். அங்கேயும் யூரோக்கள் தான் புழக்கத்தில் இருக்கும்.
இப்படியாக மொத்தம் பதினோரு நிலப்பரப்பு. நாங்கள் வசிக்கும் பிரான்சையும் சேர்ந்துக்கொண்டால் மொத்தம் பன்னிரண்டு. ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு நேரம். உலகில் பன்னிரண்டு வித நேர வித்தியாசங்களை கொண்ட ஒரே நாடு பிரான்ஸ் தான்.
அத்லாண்டிக், பசிபிக், இந்துமாசமுத்திரம், அந்தார்டிகா, அமெரிக்கா என ஐரோப்பாவை தாண்டி பல தேசங்களில் உள்ள இந்த நாடுகளின் மொத்த சனத்தொகை 2,114,000 ஆகும் (ஜனவரி - 2016 கணக்கின் படி). பிரெஞ்சு முதல் மொழியாகவும் மேலும் அப்பிரதேசங்கள் சார்ந்த மொழிகள் என மொத்தம் 50 மொழிகள் இத்தேச மக்களால் பேசப்படுகின்றன. மொத்த நிலப்பரப்பு 46,098 சதுர மைல்கள் ஆகும்!
அடேங்கப்பா... பிரான்ஸ் என்றால் சும்மாவா என்ன?! பிரான்சின் இந்த நிலப்பரப்புகள் குறித்து 'பிரெஞ்சு புதினங்கள்' பகுதியில் அவ்வப்போது பார்க்கலாம்!