Paristamil Navigation Paristamil advert login

மக்ரோன் வேண்டாம் - மக்கள் கணிப்பு!!

மக்ரோன் வேண்டாம் - மக்கள் கணிப்பு!!

16 வைகாசி 2025 வெள்ளி 15:06 | பார்வைகள் : 3731


Figaro பத்திரிகைக்காக Odoxa–Backbone Consulting  நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின் படி, 10 பேரில் 7 பேருக்கும் அதிகமானோர்,  ஜனாதிபதி மக்ரோனின்  இரண்டாவது பதவிக்கால செயல்பாடுகளை மோசமானதாக மதிப்பிட்டுள்ளனர். இந்த வீழ்ச்சி இதுவரை இல்லாத அளவிற்கு உள்ளது.

84 சதவீத பிரெஞ்சுமக்கள் 2032 ஜனாதிபதி தேர்தலில் மக்ரோன் மீண்டும் போட்டியிடக் கூடாது எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன் எதிரொலியாக, மக்ரோனின் சொந்த கட்சியினரிடையே கூட மக்ரோனின் மீள்போட்டிக்கான ஆதரவு மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது

அதிக எதிர்மறையான மதிப்பீடு

71 சதவீத  மக்கள் மக்ரோவின் தற்போதைய அரசியல் செயல்பாடுகளை மோசமானதாக மதிப்பீடு செய்கின்றனர். 5ஆம் குடியரசில்,  மோசமான அளவில் மக்கள் ஆதரவு இழந்த ஜனாதிபதியான பிரோன்சுவா ஒல்லோந்தின் நிலைமையை ஒத்த வெறுப்பை, எமானுவல் மக்ரோனும் பெறுகின்றார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்