Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரத்துக்கு வந்த ஆபத்து!!

 ஈஃபிள் கோபுரத்துக்கு வந்த ஆபத்து!!

1 ஆனி 2016 புதன் 11:09 | பார்வைகள் : 19968


 1889 ஆண்டு ஈஃபிள் கோபுரம் கட்டப்படது என்ற வரலாறு உங்களுக்கு தெரிந்தே இருக்கும். உலக வர்த்தக கண்காட்சிக்காக உருவாக்கப்பட்ட ஈஃபிள், அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடும் என அப்போது எவருக்கும் தெரியாது. அவ்வளவு ஏன், அதை நிர்மானித்த Gustave Eiffel-க்கே தெரியாது. நிரந்தரமாக தங்கும்.. உலக அதிசயமாகும்.. பிரான்சின் அடையாளமாக மாறும் என அவர்கள் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஈஃபிளுக்கு ஒரு ஆபத்து வந்தது. 
 
1889 ஆண்டு கட்டப்பட்ட ஈஃபிளை 1909 ஆம் ஆண்டு உருக்குலைப்பு செய்வது குறித்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  அப்போது ஈஃபிள் கோபுரம் உலக அதிசயமாக இல்லை... 'உலகில் மிக உயர்ந்த கோபுரம்' என்ற ரீதியில் தான் பார்க்கப்பட்டது. அதனால் கோபுரத்தை உருக்குலைப்பு செய்வது குறித்து எவரும் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. 
 
அப்போது 'இதை ரேடியோ ஒலிபரப்பியாக பயன்படுத்தலாம்' என ஒரு தலைசிறந்த (??!!) யோசனை தோன்றியது. 'அட.. ஆமாப்பா!!' என அந்த யோசனை ஏற்றுக்கொள்ள பட்டதும்... விறுவிறுவென ஈஃபிள் கோபுரம் 'ரேடியோ ஸ்டேஷன்' ஆக செயல்பட தொடங்கியது. 'முதுகு சொறிஞ்ச குச்சி முந்நூறு ரூவா ஏலம் போச்சாம்!!' என கிராமபக்கங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். அந்த கதையாகிப்போனது இறுதியில் ஈஃபிளின் நிலை!! 
 
அடப்பாவமே... உலகின் தலைசிறந்த படைப்பு ஒன்று எதேர்ச்சையாக தப்பித்து இன்றுவரை உயிருடன் இருக்கிறது!! 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்