Paristamil Navigation Paristamil advert login

இது என்ன லூவருக்கு வந்த சோதனை??!!

இது என்ன லூவருக்கு வந்த சோதனை??!!

31 வைகாசி 2016 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 19081


 நீங்கள் லூவர் அருங்காட்சியகத்துக்கு சென்றிருப்பீர்கள்..அங்கிருக்கும் ஓவியங்களையும்.. புராதன  பொருட்களையும், சிற்பங்களையும்... இன்னபிற பொருட்களையும் பார்வையிட்டிருப்பீர்கள். ஆனால் நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால்.. 'நீங்கள் லூவரை முழுமையாக பாத்திருக்க வாய்ப்பே இல்லை!' என..! 'அதெப்படி?!  நான் இதுவரை பத்து தடவைக்கும் மேலே சென்றிருக்கிறேன்!' என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் நாங்கள் சொல்வதிலும் உண்மையில்லாமலில்லை!! தொடர்ந்து படியுங்களேன்...

 
உலகில் மிகப்பெரிய அருங்காட்சியகம் லூவர் என்பது உங்களுக்கு தெரியும்! இங்கு வரும் பார்வையாளர்களுக்கு முதலில் கவர்வது அல்லது பார்க்க ஆசைப்படுவது சந்தேகமே இல்லாமல் மோனலிசாவை தான்! இது குறித்து எடுக்கப்பட்ட ஆய்வொன்றில் 'பத்து தடவை ஒருவர் லூவருக்கு வருகிறார் என்றால், அதில் 8 தடவைகள் மோனலிசாவை பார்க்கின்றார்கள்!' என சொல்கிறது அந்த ஆய்வு! 
 
ஒரு நாளைக்கு அண்ணளவாக 15 ஆயிரம் பார்வையாளர்கள் லூவருக்கு வருகிறார்கள். அதில் 70% வெளிநாட்டவர். சரி.. மேற்சொன்ன கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ள மற்றுமொரு முடிவு தான் உங்களை ஆச்சரிய படுத்தும். 3,80,000 'மாஸ்டர் பீஸ்' பொருட்கள் இருக்கும் லூவரை இதுவரை எவரும் முழுதாய் பார்த்ததில்லையாம்! அங்கிருக்கும் ஒவ்வொரு பொருளையும், 30 வினாடிகள் படி பார்வையிட்டு வந்தால்.. உங்களுக்கு சுமார் 100 நாட்கள் தேவைப்படுமாம்! அட..!!
 
சரி.. லூவரில் வேலை பார்ப்பவர்கள் கூடவா அனைத்தையும் பார்க்கவில்லை?! என நீங்கள் கேட்பது புரிகிறது.. எங்களுக்கும் அந்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது...!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்