மேற்கு சீனாவில் திடீர் நிலநடுக்கம்

17 வைகாசி 2025 சனி 07:50 | பார்வைகள் : 163
மேற்கு சீனாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சம்
அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பச்சை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்தால் சொத்துக்களுக்கோ அல்லது உயிர்களுக்கோ எவ்வித சேதங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.