Paristamil Navigation Paristamil advert login

வெளிநாடுகளில் சிறை : பிரெஞ்சு மக்கள் ஆதரவா எதிர்ப்பா??!

வெளிநாடுகளில் சிறை : பிரெஞ்சு மக்கள் ஆதரவா எதிர்ப்பா??!

17 வைகாசி 2025 சனி 09:13 | பார்வைகள் : 560


பிரெஞ்சு சிறைச்சாலைகள் நிரம்பு வழியும் காரணத்தினால், வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளை வாடகைக்கு எடுக்கும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி மக்ரோன் முன் மொழிந்திருந்தார்.

இந்நிலையில், வெளிநாடுகளில் சிறைச்சாலைகளை பெறுவது தொடர்பில் மக்களின் நிலைப்பாடு என்ன என கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் இரண்டில் ஒருவருக்கும் அதிகமானோர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 52% சதவீதமானவர்கள் ஆம் (pour) எனவும், 48% சதவீதமானவர்கள் இல்லை (contre) எனவும் தெரிவித்துள்ளனர்.

CNEWS, Europe 1  மற்றும்  JDD ஆகிய ஊடகங்களுக்காக CSA நிறுவனம் இந்த கருத்துக்கணிப்பை ஏற்கொண்டிருந்தது. இதில் 18 வயது நிரம்பிய 1,010 பேர் கலந்துகொண்டிருந்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்