Paristamil Navigation Paristamil advert login

சிகரம் தொட்ட மனிதர்கள் - 'Lucie Aubrac'

சிகரம் தொட்ட மனிதர்கள் - 'Lucie Aubrac'

30 வைகாசி 2016 திங்கள் 10:35 | பார்வைகள் : 19279


சாதனைகள் செய்வதற்கும் சாகசங்கள் செய்வதற்கும் 'பெண்' என்ற தடை ஒரு போதிலும் இல்லை என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களை இந்த உலகு நமக்கு காட்டிவிட்டுச்சென்றிருக்கிறது. ஆயுதம் ஏந்தி நாசி படைகளுக்கு எதிராக போராடிய Lucie Aubrac - இந்த வார 'சிகரம் தொட்ட மனித'ராக...!! 
 
பிரான்சின் Macon நகரில், ஜூன் மாதம் 29ம் திகதி, 1912ல் பிறந்தவர் தான் பெண்மணி Lucie. இயற்பெயர் Lucie Bernard Aubrac. பின்னர் 1939 ஆம் ஆண்டு, யூத எதிர்ப்புகளுக்காக போராடும் Raymond Aubrac என்பவரை திருமணம் செய்துகொண்டார். நாட்டுப்பற்று அதிகம் கொண்ட Lucie ஆரம்பத்தில் பல போராட்ட குழுக்களில் இணைந்து பயிற்களை எடுத்துள்ளார். இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மனியின் நாஜி படைகள் பிரான்சுக்குள் படையெடுத்த போது (1940) Lucie தனது கணவருடன்  Lyon நகருக்கு குடிபெயர்ந்து விட்டார். 
 
அங்கு வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்த  Lucie, பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பல போராட்டளில் பங்கு பற்றினார். தொடர்ந்து Libération-sud எனும் சிறு போராட்ட குழு ஒன்றில் இருந்த இவர், பல தைரியமான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பகலில் ஆசிரியராகவும், இரவில் வெவ்வேறு பெயர்களில் போராட்டங்களிலும் கலந்துகொண்டார். 
 
வருடங்கள் வேகமாக ஓடியது. தன் கணவர் Raymond உடன் சேர்ந்து Lucieயும் பல நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் கணவர் Raymond மற்றும் அவர் நண்பர் ஒருவரும் நாஜி படைகளால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது Lucie நிறைமாத கர்பிணியாக இருக்கிறார். 
 
கைது செய்யப்பட்ட கணவரின் நண்பர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி வருகிறது. மிகவும் ஆபத்தான சூழலில் தன் கணவரை மீட்டெடுக்க திட்டம் தீட்டுகிறார் Lucie. உடன் இருக்கும் போராட்ட குழுக்களை தயார் செய்துவிட்டு ஒரு தைரியமான நடவடிக்கையில் ஈடுபடுகிறார். 
 
ஜெர்மனிய படை அதிகாரியிடம் சென்று, தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் நான் கர்பிணியாக இருக்கிறேன் என்றும்... சிறையில் இருக்கும் Raymond தான் என் குழந்தையின் தந்தை எனவும், 
பிரெஞ்சு சட்டம் சிறையில் இருப்பவரை திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கிறது.. நீங்களும் அவரை திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் கோரினார். 
 
இதற்கு சம்மதித்த ஜெர்மனிய அதிகாரி சிறையில் வைத்தே திருமணத்தை நடத்தி வைக்கிறார். அப்போது எதிர்பாரா விதமாக உள் நுளைந்த Lucieயின் போராட்ட தோழர்கள் அங்கிருக்கும் 15 ஜெர்மனிய வீரர்களை தாக்க, இரண்டாவது தடவையாக திருமணம் செய்துகொண்ட Lucie மற்றும் Raymond உட்பட, தோழர்கள் அனைவரும் தப்பிக்கின்றனர். 
 
இதுபோல பல சாகசங்கள் செய்து பிரான்சை பெருமைகொள்ள செய்த இப்பெண்மணி என்றைக்குமே மறக்கமுடியாத மாமனிதர் தான்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்