சேவை கடவுச்சீட்டை வைத்துள்ள அல்ஜீரியர்கள் தற்போது பிரான்ஸுக்குள் நுழைய வீசா தேவை! தொடரும் பதட்டம்.....

17 வைகாசி 2025 சனி 13:12 | பார்வைகள் : 747
பிரான்ஸுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையே நிலவும் பதட்டம் காரணமாக, இனிமேல் அல்ஜீரிய தூதரக மற்றும் சேவை கடவுச்சீட்டை வைத்திருக்கும் நபர்கள் பிரானஸுக்குள் நுழைய வீசா தேவை என பிரான்ஸ் அரசு இன்று அறிவித்துள்ளது.
இதுவரை வீசா விலக்குக் கொள்கை பின்பற்றப்பட்டிருந்தாலும், தற்போது அந்த ஒப்பந்தம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. வீசா இல்லாமல் வருபவர்கள், நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இது, அல்ஜீரிய அரசு மீண்டும் 12 பிரான்ஸ் அதிகாரிகளை நாடு கடத்தியதற்கான பதிலடி நடவடிக்கையாக அமைந்துள்ளது. மேலும் பிரான்ஸும், அல்ஜீரிய தூதர்களை விரைவில் திருப்பி அனுப்பும் திட்டத்தில் உள்ளது.