பிரான்சின் மிக நீளமான கால்வாய்!!

29 வைகாசி 2016 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 23775
'புராதனங்கள்' என்ற வார்த்தை எந்த நாட்டுக்கு பொருந்துகின்றதோ இல்லையோ... பிரான்சுக்கு அத்தனை பொருத்தம்! எண்ணற்ற புராதன கட்டிடங்களை.. கலைகளை.. கொண்டிருக்கிறது நம் பிரெஞ்சு தேசம். அதில் ஒன்றுதான் (Canal) du Midi கால்வாய்!!
'இரண்டு கடல்களின் கால்வாய்' என இதற்கு மற்றுமொரு பெயரும் இருக்கிறது. பிரான்சில் உள்ள மிக பழமை வாய்ந்த கால்வாயாக இது இருக்கிறது. Pierre-Paul Riquet என்பவர் வடிவமைத்து 1666 ஆரம்பிக்கப்பட்ட இந்த கால்வாய் கட்டும் பணி... பதினைந்து வருடங்கள் எடுத்துக்கொண்டது. 'World Heritage Site' என UNESCO அறிவித்துள்ள பட்டியலில் இந்த கால்வாயும் உண்டு.
துலூஸ் நகரில் ஆரம்பித்து, ஸ்பெயின் எல்லையோரம் இருக்கும் Etang de Thau எனும் கடற்கரையோரம் சென்று முடிவடைகிறது இந்தக் கால்வாய். மொத்தம் 241 கிலோமீட்டர்கள் நீளம். 126 மேம்பாலங்கள் இந்த கால்வாயின் மேல் கட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து பல தடுப்புகள், சுரங்கள்.. என பல அழகான இடங்களுக்குள்ளால் பயணித்து பிரான்சின் அழகை கூட்டுகிறது இந்த Canal du Midi.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1