முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்கின்றன!
27 வைகாசி 2016 வெள்ளி 10:51 | பார்வைகள் : 19816
இதுவரை நடைபெற்ற எந்த யூரோ கிண்ண போட்டிகளை விடவும், இந்த வருடம் நடைபெறும் போட்டிகள் நிச்சயம் விறுவிறுப்பான போட்டிகளாக அமையும்! இப்படி சொல்வதற்கு காரணம் இல்லாமலில்லை...!!
1960 ஆம் ஆண்டு முதன் முதலாக யூரோ கிண்ண போட்டிகள் நடைபெற்றபோது அதில் 16 நாடுகள் மாத்திரமே கலந்துகொண்டிருந்தன. இறுதிப்போட்டியில் சோவியத் யூனியன் 2-1 என்ற கணக்கில் Yugoslavia நாட்டை எதிர்த்து வெற்றி பெற்றது.
அதன் பின் நடைபெற்ற போட்டிகளின் போது அணிகளின் எண்ணிக்கை கூடும் குறையும்... ஆனால் முதன் முறையாக இந்த வருடம் நடைபெற இருக்கும் போட்டிகளின் போது மொத்தம் 24 அணிகள் மோத இருக்கின்றன. 1996 ஆம் ஆண்டுக்குப்பின் 16 அணிகள் மாத்திரம் பங்கேற்று வந்த இப்போட்டியில் 24 அணிகள் மோதுகின்றன என்றால் போட்டியின் சுவாரஷ்யத்துக்கு பஞ்சமே இருக்காது என்றாகிறது.
மொத்த அணிகளையும் நான்கு பிரிவுகளாக பிரித்து, குழுவுக்கு ஆறு அணிகள் வீதம் விளையாட இருக்கின்றன. 'Nock out' முறை மூலம்.. வெற்றி பெற்றால் மாத்திரமே அடுத்த சுற்றுக்கு வாய்ப்பு ( அடுத்த 'சான்ஸ்' எல்லாம் இல்லை) என தீர்மானிக்கப்பட்டுள்ளதால்.. இந்த வருடம் போட்டிகளின் போது அனல் பறக்கும் என்பதில் ஐயமில்லை!!