திருமணத்தை மறுத்த நகரபிதா - தண்டனை வழங்கப்படுமா?

18 வைகாசி 2025 ஞாயிறு 14:18 | பார்வைகள் : 728
த்ரோம்(Drôme) பகுதியில் உள்ள Bourg-lès-Valence நகரின் நகரபிதா, ஒரு துனிசியைச் சேரந்த ஒருவரிற்கும் ஒரு பிரெஞ்சு பெண்ணிற்குமான த திருமணத்தை நிராகரித்துள்ளார்.
இந்தத் துனிசியப் பிரஜைக்கு பிரான்சில் முறையான வதிவிட உரிமை இல்லை.
இந்த நகரபிதா மார்லென் முரியே ( Bourg-lès-Valence) இந்த திருமணம் அவரது பிரெஞ்சு குடியுரிமையைப் பெறுவதற்கான நடவடிக்கையாக (mariage blanc) இருக்கலாம் என சந்தேகம் கொண்டு மே 17 சனிக்கிழமை நடைபெற வேண்டிய திருமணத்தை இரத்துச் செய்துள்ளார். இது சட்டப்படி குற்றமாகும்.
முறையான தங்குமிட அனுமதியற்ற துனியசியரின் பிரெஞ்சு பெண்ணுடன் சனிக்கிழமை திருமணம் செய்ய முடியவில்லை. இந்தத் திருமணத்தை நடாத்த வேண்டிய நகரபிதா இது சட்டவிரோத திருமணம் எனக் கூறி, வெறும் அனுமானத்தினால் திருமணத்தை;தடை செய்துள்ளார்.
குடியுரிமைக்காக நடக்கும் திருமணம் என்ற நகரபிதாவின் குற்றச்சாட்டினை மணமகளும் மணமகனும் முற்றாகவே மறுத்துள்னர்.
«நீங்கள் சத்தியமாகச் சொல்லுங்கள், யாராவது நேராக நகரபிதா அலுவலகத்திற்கு வந்து 'நான் இந்த திருமணத்தை வெறும் ஆவணங்களுக்காகச் செய்கிறேன்' என்று சொல்லுவார்களா? நீங்கள் இப்படிச் சொல்வதை எப்போதாவது கேள்விப்பட்டீர்களா? மன்னிக்கவும், எனக்கு கோபமாக இருக்கிறது»
என இருவரும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
வலோன்ஸ் (Valence) நீதிமன்றம் திருமணத்தை நடத்த உத்தரவு பிறப்பித்தபோதிலும், நகரபிதா நீதிமன்றத்தை மதிகமகாது, அதனை செயல்படுத்த மறுத்துவிட்டார். இதையடுத்து, மணப்பெண் சில்வி நேரடியாக நகரபிதா அலுவலகத்திற்கு சென்று விளக்கம் கேட்டபோதும், நகரபிதா பதில் அளிக்க மறுத்தார்.
நான் திருமணம் செய்ய அனுமதி கேட்டேன், ஆனால் அவர் என்னை மறுத்தார். இதற்கு இப்போது நான் மேல்முறையீட்டிற்காக நீதிமன்றத்திற்குச் செல்ல உள்ளேன். அங்கு இதற்கான தீர்ப்பைப் பெறுவேன் என மணமகள் சில்வி உறுதியாகச் தெரிவித்தார்.
நகரபிதா மார்லேன் முரியரிற்கு, சட்ட விரோதமாக திருமணத்தை நடாத்த மறுத்ததற்கும், நீதிமன்றத் தீர்ப்பபை மறுதலித்ததற்காகவும், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 75,000 அபராதமும் விதிக்க நேரிடும் என சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.