அமெரிக்காவில் கடும் சூறாவளி- 27 பேர் பலி

18 வைகாசி 2025 ஞாயிறு 14:49 | பார்வைகள் : 146
அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென சூறாவளி ஏற்பட்ட நிலையில் கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல மாநிலங்களில் ஏற்பட்ட இந்த மோசமான வானிலை காரணமாக கென்டக்கியில் 14 பேரும், மிசோரியில் 7 பேரும், விர்ஜீனியாவில் 2 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கென்டக்கியில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஆளுநர் ஆண்டி பெஷியர் உறுதிப்படுத்தினார்.
லாரல் கவுண்டி ஷெரீப் துறையினர் சனிக்கிழமை இரவு 11:49 மணிக்கு சூறாவளி தாக்கியதாக சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தனர்.
இதற்கிடையில், விர்ஜீனியாவில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்து வாகனங்கள் மீது விழுந்தன.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கடுமையான வானிலையின் முழுமையான சேத விவரங்கள் மற்றும் மேலும் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் குறித்து அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர்.