Paristamil Navigation Paristamil advert login

XIII - காமிக்ஸ் உலகின் தலையெழுத்தை மாற்றிய கதாநாயகன்! (இறுதி பகுதி)

XIII - காமிக்ஸ் உலகின் தலையெழுத்தை மாற்றிய கதாநாயகன்! (இறுதி பகுதி)

26 வைகாசி 2016 வியாழன் 11:17 | பார்வைகள் : 20564


பகுதி 2 : இங்கே!!
 
 
தமிழில் 'இரத்தப்படலம்'!! 
 
பிரெஞ்சு, ஆங்கிலத்தில் வெளிவந்த காலத்திலேயே தமிழிலும் வெளி வர தொடங்கினான் பதின்மூன்று. உரிமம் வாங்கி 'லயன் காமிக்ஸ்' நிறுவனத்தினர் வெளியிட்டார்கள். 
 
ஆனால் தமிழில் சில பகுதிகள் மாத்திரமே வெளியாகியிருந்தது. விறுவிறுப்பாக ஆரம்பித்த இந்த தொடர்... அடுத்து என்ன அடுத்து என்ன என தீ பற்றிக்கொண்டது வாசகர்களுக்கு மட்டுமல்ல லயன் பதிப்பகத்தாருக்கும் தான். கருப்பு வெள்ளையில் வெளியான 'பதின்மூன்றை' பென்சில் கலர் கொண்டு வண்ணம் தீட்டி பொக்கிஷமாய் வைத்த வெறித்தனமான வாசகர்களும் உண்டு. 
 
லயன் பதிப்பகத்தாரின் பெரும் முயற்சியில் , ஒரே புத்தகமாக வெளிவந்தது. அதுவரை காமிக்ஸ் என்றால் குழந்தைகள் சமாச்சாரம் என எண்ணியிருந்த பலர் தலையணை 'சைஸ்' காமிக்ஸ் புத்தகத்தை கண்டு மிரட்சியடைந்தனர். 854 பக்கங்கள். இருபது வருட தவம் இறுதியாக 2012இல் கலைந்தது. 200 ரூபாய் இந்திய விலைக்கு வெளிவந்தது. 
 
குறிப்பிட்ட அளவு பிரதிகள் மாத்திரமே அச்சடிக்கப்பட்ட இந்த புத்தகத்தை வைத்திருப்பவர்கள் இன்று ராஜா. 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இவ் இதழ்... இன்று 15 ஆயிரம் ரூபாய் வரை பேரம் பேசப்படுகிறது.
 
வெளியிடப்பட்ட 'இரத்தப்படலம்' புத்தகத்தின் ஒரு பிரதி அதன் ஒரிஜினல் பதிப்பகத்தாரிடம் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறதாம். இக்கதையை ஒரே புத்தகமாக வெளியிட்ட ஒரே பதிப்பகம் லயன் காமிக்ஸ் தானாம்! 
 
***********
 
கதாநாயகன் பதின்மூன்றின் வெற்றிச் சரித்திரம் இது!! 
 
XIII 'வீடியோ கேம்'மாக உருவெடுத்தான்... PlayStation, Xbox, PC, iMac என அனைத்து இயங்கு தளங்களிலும் ஹிட் அடித்தான். 
 
XIII சின்னத்திரை நாடகமாக உருவெடுத்தான். பிரெஞ்சு Canal+ தொலைக்காட்சியில் நாடகமாக தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றான். அதன் DVD பதிப்பு தற்போது விற்பனையில் உள்ளது. 
 
XIII மொழிகளை கடந்தான்.
பிரெஞ்சில் தயாரான இந்த காமிக்ஸ், ஆங்கிலம், டொச், ஜெர்மன், போலிஷ், தமிழ், சேர்போ கேர்டைன், இத்தாலி போன்ற பல மொழிகளில் உருவாகி தேசம் முழுவதும் பரவலானான். 
 
XIII மர்மங்கள்! குறிப்பிட்ட பகுதியில் வான் ஹாம் கதையை முடிக்க, அதை தொடர நினைத்தார் ஓவியர் வில்லியம் வான்ஸ். Yves Sente, Youri Jigounov என இரண்டு எழுத்தாளர்களை வைத்துக்கொண்டு XIIIஇன் மர்மங்கள் என தொடர்கிறார்கள். கதையில் வரும் கதா பாத்திரங்களின் பின்னணியை கொண்டு பின்னப்பட்டு வெளியிடப்படும் இக்கதைகளும் விற்பனையில் சூடு பிடிக்கிறது. 
 
XIII மார்வலிடம் வந்தான். இப்போது அமெரிக்க காமிக்ஸ் உலகின் 'தாதா' Marvel Comics பதிப்பகம், XIII உரிமம் வாங்கி, ஆங்கிலத்தில் பதிப்பிக்கிறது. அமேசான் இணையத்தளத்தில் வாங்கலாம். 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்