Paristamil Navigation Paristamil advert login

Orly விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தில் கோளாறு: இன்று 40% விமானங்கள் ரத்து!

Orly விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தில் கோளாறு: இன்று 40% விமானங்கள் ரத்து!

18 வைகாசி 2025 ஞாயிறு 16:52 | பார்வைகள் : 546


பரிஸ்-ஓர்லி (Aéroport d’Orly) விமான நிலையத்தில் இன்று பிற்பகல் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், விமானங்களுக்கு இன்று நள்ளிரவு வரை இடையூறுகள் ஏற்படும் என “விமான போக்குவரத்து துறை”(l’Aviation civile-DGAC) அறிவித்துள்ளது.

மே 18 ஞாயிறு பிற்பகலில் ஓர்லி கோபுரத்தில், விமான கட்டுப்பாட்டு உபகரணங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விமான போக்குவரத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது என DGAC தெரிவித்துள்ளது.

எனவே, பரிஸ்-ஓர்லி விமான நிலையத்தில் 40% விமானங்களை இன்றைய மாலைக்குள் ரத்து செய்யுமாறு விமான நிறுவனங்களிடம் கோரப்பட்டுள்ளது. இது சுமார் 130 விமானங்களைப் பாதிக்கின்றன.

DGAC-இன் தொழில்நுட்ப குழுவினர் நிலைமையை விரைவில் சரிசெய்ய முழுமையாக ஈடுபட்டுள்ளனர் என விமான போக்குவரத்து துறை உறுதியளித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்