Paristamil Navigation Paristamil advert login

அடர்காட்டில் புதிய சிறைச்சாலை! - நீதித்துறை அமைச்சர் தகவல்!!

அடர்காட்டில் புதிய சிறைச்சாலை! - நீதித்துறை அமைச்சர் தகவல்!!

18 வைகாசி 2025 ஞாயிறு 19:30 | பார்வைகள் : 547


போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகளை தனிசிறையில் சிறைவைக்கும் திட்டம் ஒன்றை அரசு முன்னெடுத்து வருகிறது. இதற்காக மூன்று வெவ்வேறு சிறைகளை தேர்ந்தெடுத்துள்ளது. அவற்றில் ஒன்று  அடர் காட்டுக்குள் அமைக்கப்பட உள்ளது.

முதலாவது சிறை பா-து-கலே மாவட்டத்தின் Vendin-le-Vieil நகரிலும், இரண்டாவது சிறைச்சாலை Orne மாவட்டத்தின் Condé-sur-Sarthe நகரிலும் அமைக்கப்பட உள்ளது. மூன்றாவது சிறைச்சாலை வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள French Guiana வில் அமைக்கப்பட உள்ளது. அங்குள்ள அடர் காட்டுப்பகுதியில் இடம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பிரெஞ்சு நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin, இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்