Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம்…

இந்தோனேசியாவின்  சுமத்ரா தீவில் நிலநடுக்கம்…

18 வைகாசி 2025 ஞாயிறு 18:12 | பார்வைகள் : 3690


இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று (18) அதிகாலை 4.6 ரிச்டர் அளவில் அ நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டு நேரப்படி அதிகாலை 2.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் வடக்கு சுமத்ராவில் 

58 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் மெதுவான அசைவுகள் ஏற்பட்டதாகவும் நிலநடுக்கத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 11ஆம் திகதியும் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்