Paristamil Navigation Paristamil advert login

XIII - காமிக்ஸ் உலகின் தலையெழுத்தை மாற்றிய கதாநாயகன்! (பகுதி 2)

 XIII - காமிக்ஸ் உலகின் தலையெழுத்தை மாற்றிய கதாநாயகன்! (பகுதி 2)

25 வைகாசி 2016 புதன் 10:36 | பார்வைகள் : 19987


 
பகுதி 1 : இங்கே!
 
 
'அலைகள் ஆர்ப்பரிக்கும் ஒரு கடற்கரை. தலையில் தோட்டா உராய்த்து, தன் நினைவுகளை இழந்த ஒருவன் ... அவன் தோளில் XIII என பச்சை குத்தப்பட்டு மயங்கி கிடக்கிறான். கடல் நீர் காயத்தை எரித்துவிட்டதால் உயிராபத்து எதுவும் இல்லாமல் காப்பாற்றப்படுகிறான். 
 
அவன் குணமடைந்து நன்றாக தேறிவிட்ட பொழுதும்.. அவனுக்கு தான் யார் என்பது மறந்துவிட்டிருந்தது. உரசிச்சென்ற தோட்டா... சில நினைவலைகளை அழித்துச்சென்றிருக்கிறது. தன்னைப்பற்றி அறிந்துகொள்ள ஆரம்பிக்கும் போது, சில சமூக விரோத கும்பலால் தாக்கப்படுகிறான். காவல் துறையினர் தேடுகின்றார்கள். தன் நினைவுகளை இழப்பதற்கு முன்னர் தான் சாதரணமானவனாக இருக்கவில்லை என்பதை உணரும் நாயகன்... தன்னை சுற்றியிருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க பார்க்கிறான்... விறுவிறு ஆட்டம் சூடுபிடிக்கிறது!' 
 
XIII - முதன் முதலாக 1984 ஆம் ஆண்டு பிரான்சின் பழைமை வாய்ந்த Spirou இதழில் தொடராக வெளிவந்தது. வெளிவந்த காலத்தில் Spirou வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் Dargaud நிறுவனமும் ஒவ்வொரு பாகத்தையும் தடித்த அட்டை போட்டு ஒவ்வொரு பகுதிகளையும் வெளியிட்டது.  இந்த தொடர் எட்டாவது பகுதியை நெருங்கும் போது ஒவ்வொன்றும் 1,40,000 பிரதிகள் வரை விற்றுத்தள்ளியது. 
 
தொடருக்கு எழுந்த பலத்த வரவேற்பு காரணமாக, கதையில் சிலபல மாற்றங்களை செய்யவேண்டி ஏற்பட்டது. வான் ஹாம் எழுதிய கதை 12 பாகங்களை தாண்டவில்லை. ஆனால் பதிப்பகத்தாரின் கெடுபிடியால் கதை 20 பாகங்கள் வரை சென்றது. ஆனாலும் ஒரு இடத்தில் கூட விறுவிறுப்பு குறையவில்லை.  சுவாரஷ்யத்துக்கு பஞ்சமில்லை! 
 
ஒரு காமிக்ஸ் கதைக்காக இவ்வளவு உழைப்பை கொட்டியது இதுவே முதன் முறை. எண்ணற்ற கதை மாந்தர்கள். சம்பவங்கள்.. வேறு வேறு இடங்கள்.. நாடுகள்.. காலகட்டங்கள்... என ஒவ்வொரு பக்கமும் பல தேசங்கள் சங்கமிக்கும் இடமாக மாறியது. 
 
ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படுத்திய பொருட்கள்... உடைகள் என மிக நேர்த்தியாக தேர்தெடுக்கப்பட்ட உழைப்பு! இந்த உழைப்புக்குத்தான் பலன் கிடைத்தது. 
 
அதுவரை காலமும் காமிக்ஸ் ரசிகர்களால் கவரப்பட்ட XIII, அதன் பின்னர் சினிமா, தொலைக்காட்சி என பலதரப்பட்ட மக்களின் கவனத்தை ஈர்த்தது. பிரெஞ்சு தேசத்தின் நாயகன் பதின்மூன்று வேறுவிதமாக விஸ்பரூபம் எடுக்க தொடங்கினான்! 
 
(தொடரும்)

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்