உடனடியான மனிதாபிமான உதவிகள் - வெளிவிவகார அமைச்சர்!

19 வைகாசி 2025 திங்கள் 00:48 | பார்வைகள் : 299
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஞாயிற்றுக்கிழமை தனது நாடு, ஹமாஸுடன் 'சண்டையை முடிவுக்கு கொண்டுவரும்' ஒரு ஒப்பந்தத்திற்கு திறந்திருப்பதாக தெரிவித்தார். இது, காசா பாலத்திலுள்ள இஸ்ரேலின் படையெடுப்புகளுக்கான அவரின் மறைமுகக் குறிப்பு ஆகும்.
பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் நொயல் பரோ «உடனடி, பெரும் அளவு மற்றும் தடையற்ற' மனிதாபிமான உதவிகள் மீண்டும் ஆரம்பிக்கப்டல் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், «பிரான்ஸ் உடனடி போர்நிறுத்தத்தையும், ஹமாஸின் கைதிகளின் விடுதலையையும் கோருகிறது. இரு நாடுகளைக் கொண்ட அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்காகவும் பிரான்ஸ் செயல்படுகிறது' என்றும் நினைவூட்டினார்.
3 மாதங்களாக நடந்துவரும் இராஜதந்திர முயற்சிகளுக்குப் பிறகு, இஸ்ரேல் அரசு காசாவிற்கு மனிதாபிமான உதவியை மீண்டும் ஆரம்பிக்கும் என அறிவித்துள்ளது.
இது உடனடியாகவும், பெருமளவிலும், எந்த தடையுமின்றி நடைபெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இது காசாவில் ஏற்பட்ட மனிதாபிமான பேரழிவை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதுடன், பசிக்கொடுமை நிலைமையையும் நிரந்தரமாக கட்டுப்படுத்த வேண்டும் என X தளத்தில் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.