ஐபிஎல் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைத்த கே.எல்.ராகுல்

19 வைகாசி 2025 திங்கள் 11:21 | பார்வைகள் : 224
விராட் கோலியின் T20 சாதனையை கே.எல்.ராகுல் முறியடித்துள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பாட்டம் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்கள் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் எடுத்தது.
டெல்லி சார்பில், அதிகபட்சமாக அணித்தலைவர் கே.எல்.ராகுல், 65 பந்துகளில் 115 ஓட்டங்கள் எடுத்தார்.
தொடர்ந்து 200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, விக்கெட் இழப்பின்றி 19 ஓவர் முடிவில் 205 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சாய் சுதர்சன் 61 பந்துகளில் 108 ஓட்டங்களும், சுப்மன் கில் 53 பந்துகளில் 93 ஓட்டங்களும் எடுத்தனர். இதன் மூலம் ஒரு சேசிங்கின் போது எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஓட்டங்கள் என்ற மாபெரும் உலக சாதனையை செய்து இருக்கின்றனர்.
இதன் மூலம் குஜராத் அணி பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை உறுதி செய்தது. தற்போது குஜராத், பஞ்சாப், பெங்களூரூ அணிகள் பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளன.
இந்த போட்டியில் கே.எல்.ராகுல் 33 ரன்களை தாண்டியதன் மூலம் T20 போட்டிகளில் வேகமாக 8000 ஓட்டங்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக விராட் கோலி, 243 இன்னிங்ஸ்களில் 8000 டி20 ஓட்டங்கள் எடுத்திருக்கிறார். தற்போது கே.எல்.ராகுல் 224 இன்னிங்ஸ்களிலேயே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இதன் மூலம் சர்வதேச அளவில் 8000 T20 ஓட்டங்களை கடந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். 218 இன்னிங்ஸ்களில் 8000 டி20 ஓட்டங்களை எட்டி பாபர் அசாம் முதலிடத்திலும், 213 இன்னிங்ஸ்களில் 8000 டி20 ஓட்டங்களை எட்டி கிறிஸ் கெயில் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
மேலும், ஐபிஎல் தொடரில் தனது 5வது சதத்தை பதிவு செய்துள்ள கே.எல்.ராகுல், இதன் மூலம் 5 ஐபிஎல் சதமடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விராட் கோலி 8 சதமடித்து முதலிடத்தில் உள்ளார்.
மேலும், 3 வெவ்வேறு ஐபிஎல் அணிகளுக்காக சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்காக சதமடித்துள்ளார்.