இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

19 வைகாசி 2025 திங்கள் 10:28 | பார்வைகள் : 188
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது, இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (19) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 98 சதம், விற்பனை பெறுமதி 303 ரூபாய் 48 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபாய் 95 சதம், விற்பனை பெறுமதி 405 ரூபாய் 5 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபாய் 19 சதம், விற்பனை பெறுமதி 340 ரூபாய் 92 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350 ரூபாய் 20 சதம், விற்பனை பெறுமதி 366 ரூபாய் 16 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 209 ரூபாய் 94 சதம், விற்பனை பெறுமதி 218 ரூபாய் 38 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 187 ரூபாய் 20 சதம், விற்பனை பெறுமதி 196 ரூபாய் 91 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபாய் 49 சதம், விற்பனை பெறுமதி 235 ரூபாய் 38 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 2 சதம், விற்பனை பெறுமதி 2 ரூபாய் 10 சதம்.