சிகரம் தொட்ட மனிதர்கள் - Charles de Gaulle! (கடந்த வார தொடர்ச்சி)
_crop_615x324.jpg)
23 வைகாசி 2016 திங்கள் 11:01 | பார்வைகள் : 23420
பகுதி ஒன்று : இங்கே!!
இரண்டாம் உலகப்போர் தொடங்கிற்று: பிரெஞ்சு இராணுவத்தில் 'பிரிகேடியர் ஜெனரல்' ஆக இருந்தார் சாள்ஸ் து கோல். ஐரோப்பாவின் மிகச்சிறந்த போர் தந்திரோபாயம் சாள்ஸ் து கோலினுடையது. ஆனால் அதை பயன்படுத்தியது அடோப் ஹிட்லர்.
எப்போதும் எதிரிகளை வெற்றிபெற வைத்து தான் வரலாறுகளுக்கு பழக்கம். இங்கும் ஹிட்லரின் கை ஓங்கியது. யுத்தத்தில் பிரான்ஸ் கடுமையாக பின் வாங்கிக்கொண்டிருந்தது. அப்போதும் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் சாள்ஸ் து கோல். கடுமையான தோல்வி. பிரெஞ்சு அரசு ஜெர்மனியிடம் சரணடைந்தது. சாள்ஸ் து கோல்
பிரிட்டனுக்கு சென்றுவிட்டர்.
பிரான்சுக்காக சாள்ஸ் து கோல் உருவாக்கிய போர் யுக்தியை ஹிட்லர் பிரான்சுக்கு எதிராக பயன்படுத்தினார். வரலாறு தன் பக்கங்களில் கருப்பு மையை பூசிக்கொண்டது.
இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் பிரான்ஸ் 'Free France' (அமைப்புகள் அற்ற அரசு) ஆக இருந்தது. சாள்ஸ் து கோல் தொடர்ந்தார்.... வழிநடத்தினார். இரண்டு வருடங்கள் (1944-1946) தற்காலிக தலைவராக இருந்தார். ஆனால் உலகப்போர்களின் தோல்வியால் மனம் வெறுத்த சாள்ஸ் து கோல், அரசியலில் இருந்து விலகிக்கொண்டார். தற்காலிக தலைவர் பதவியை விலகி, நிரந்தரமாக ஒதுங்கிக்கொண்டார்.
அதன் பின்னர் பன்னிரண்டு வருடங்கள் ஓடிற்று. சாள்ஸ் து கோல் அரசியலுக்கு இழுக்கப்பட்டார். நாட்டின் ஜனாதிபதி ஆனார். பின்னர் 9ம் திகதி நவம்பர் மாதம் 1970 ஆம் ஆண்டு தன்னுடைய 80 ஆவது வயதில்.. ஒரு மழை நாளில் காலமானார் சாள்ஸ் து கோல்.
தன் நாட்டுக்காக அத்தனை முனைப்பாக இருந்த சாள்ஸ் து கோல் போல் ஒருவரை மீண்டும் இந்த பிரான்ஸ் சந்திக்கவில்லை. சாள்ஸ் து கோல் மிகச்சிறந்த வீரரோ.. மிகச்சிறந்த தலைவரோ இல்லை... ஆனால் இவரின் நாட்டுப்பற்று நிச்சயம் சிலிர்க்கவைக்கக்கூடியது!!
மேலும்...,
* சாள்ஸ் து கோலின் முழுப்பெயர், Charles André Joseph Pierre Marie de Gaulle ஆகும்.
* இவரின் துனைவியார் பெயர் Yvonne ஆகும். இவருக்கு Philippe, Élisabeth, Anne என மூன்று பிள்ளைகள்.
* பிரான்சின் மிகப்பெரும் விமான நிலையம் Roissy நகரில் அமைந்துள்ள Charles de Gaulle Airport ஆகும்.
* இவருக்கு Big Charles", "Le Coloner Motor", மற்றும் "great asparagus." போன்ற பட்டப்பெயர்கள் உண்டு.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1