முயல்களின் தேசம் !!
22 வைகாசி 2016 ஞாயிறு 12:17 | பார்வைகள் : 20249
பிரான்சின் மிகப்பெரிய விமான நிலையமான Charles de Gaulleவுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகளில் படிக்கிறோம். ஆனால் பயங்கரவாதிகளுக்கு முன்னர் இருந்தே வேறு ஒரு பிரச்சனை இந்த விமான நிலையத்துக்கு இருக்கிறது.
CDG விமான நிலையத்துக்கு பிரச்சனை முயல்களால். நம்புவதற்கு கஸ்டம் தான். ஆனால் அதுதான் உண்மை. விமான நிலையத்தை சுற்றி கணக்குவழக்கில்லால் முயல்கள் குமிந்து கிடக்கிறன. விமான ஓடுதளங்களில் முயல்கள் ஓடுகின்றன.. தாவுகின்றன.. வரும் விமானங்களை எல்லாம் தலையை நிமிர்த்தி வேடிக்கை பார்க்கின்றன.
விமான நிலையத்துக்கு முயல்கள் வரவில்லை. முயல்கள் வசித்த இடத்தில் விமான நிலையத்தை கட்டியிருக்கிறார்கள். ஓடும் விமானங்களில் சிக்குண்டு விடுமோ என்பதே பெரும் பிரச்சனையாக இருக்கிறது CDG விமான நிலையத்துக்கு.
பல தடவைகள் விலங்கியல் காப்பாளர்கள், ஆய்வாளர்கள் வந்து முயல்களை வலை வீசி பிடித்துச்சென்றிருக்கிறார்கள். இருந்தும் முயல்கள் குறைந்த பாடில்லை. விமான நிலையத்தை சுற்றி உயர்ந்து வளர்ந்திருக்கும் கோரை புற்களுக்கு நடுவே ஓடி மறையும் முயல்கள் சில சமயங்களில் விமான நிலையத்திற்குள்ளும் நுழைந்துவிடுகின்றன.
பயணிகள் பல தடவைகள் முயல்களோடு போட்டோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட சம்பவங்கள் கூட நடந்திருக்கின்றன. இது என்ன CDG விமான நிலையத்திற்கு வந்த சோதனை???!!