முதன்முறையாக மிக குறைந்த விலையில் நுழைவுச்சீட்டு விற்பனை!
21 வைகாசி 2016 சனி 11:09 | பார்வைகள் : 19845
யூரோ கிண்ண போட்டிகள் எந்த நாட்டில் நடைபெற்றாலும், அனைத்து போட்டிகளுக்குமான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னரே விற்பனையாகி முடிந்துவிடும். இந்த வருடமும் அதே கதை தான். ஆனால் இந்த வருட நுழைவுச்சீட்டு விற்பனையில் சில ஆச்சரியங்கள் நடந்தேறியது.
முதன் முறையாக மிக மிக குறைந்த விலையில் நுழைவுச்சீட்டுக்கள் இந்த போட்டிகளின் போது விற்பனை செய்யப்பட்டிருந்தது. எவ்வளவு என்றால் 25 யூரோக்களுக்கு!!
மொத்தமாக நடைபெற இருக்கும் 51 போட்டிகளில், முதல் 43 போட்டிகளுக்கு இந்த குறைந்தவிலையிலான நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
அதுபோல், இறுதி போட்டியை தவிர மீதி அனைத்து போட்டிகளுக்கும் 100 யூரோக்களுக்கு குறைவான நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையில் இருந்துள்ளன.
இந்த போட்டிகளில் அதிக விலையுள்ள நுழைவுச்சீட்டாக 895 யூரோக்களுக்கு மொத்தம் 2000 நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையாகியுள்ளது.
மற்றுமொரு ஆச்சரியமான செய்தி தெரியுமா??! போட்டிகள் ஆரம்பிப்பதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர், அதாவது ஜூன் 10, 2015 ஆம் ஆண்டே இப்போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை ஆரம்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
25 யூரோக்களுக்கு நுழைவுச்சீட்டா??! இது நல்லா இருக்கே... என்கிறீர்களா??! ஆனால் நுழைவுச்சீட்டுக்கள் தான் அனைத்தும் விற்பனைசெய்யப்பட்டு முடிந்து விட்டதே?!!