இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக களமிறங்கும் பிரான்ஸ், பிரித்தானியா, கனடா!!

19 வைகாசி 2025 திங்கள் 20:21 | பார்வைகள் : 654
”நெத்தன்யாஹு அரசாங்கத்தின் மோசமான செயல்களை கண்டுகொள்ளாமல் இருக்கமாட்டோம்” என பிரான்ஸ்-பிரித்தானிய-கனேடிய அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், பிரித்தானிய பிரதமர் கியஸ்டாமர், கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஆகிய மூவரும் இணைந்த அறிக்கை ஒன்றை இன்று மே 19, திங்கட்கிழமை வெளியிட்டனர். அந்த அறிக்கையிலேயே மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
”இருநாடுகள் தீர்வை அடைவதற்கான பங்களிப்பாக பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மேலும் இந்த நோக்கத்துக்காக மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என அவர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு, “இந்த நோக்கத்தைச் சுற்றி ஒரு சர்வதேச ஒருமித்த கருத்தை உருவாக்கும் முனைப்புடன் செயற்பட்டு வருகிறோம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் அரசாங்கம் மேற்கொள்ளும் விதிமீறல்களை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கமாட்டோம்.” எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 52 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சிவில் பாதுகாப்பு அமைப்பு இன்று தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.