Impôt 2025: வரி தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி! தாமதம் ஏற்பட்டால் அபராதம்!

19 வைகாசி 2025 திங்கள் 22:47 | பார்வைகள் : 526
2024-2025 வருமானத்தை அறிவிப்பதற்கான கடைசி தேதி முடிவுக்கு வருகிறது!
காகித படிவத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செவ்வாய்க்கிழமை இரவு 11:59 மணி வரை ஆகும். மேலும் ஆன்லைன் படிவத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வசிக்கும் இடத்தை பொறுத்து மாறுபடும்.
- Département 1 முதல் 19 இல் வசிப்பவர்களும் பிரான்சில் வசிக்காதவர்களும், மே 22, வியாழக்கிழமை இரவு 11:59 மணிக்குள் ஆன்லைன் படிவத்தை தாக்கல் செய்ய முடியும்.
- Département 20 முதல் 54 இல் வசிப்பவர்கள், மே 28, 2025 புதன்கிழமை இரவு 11:59 மணிக்குள் ஆன்லைனில் அறிவிக்க வேண்டும்.
- Département 55 முதல் 974இல் வசிப்பவர்கள், ஜூன் 5, 2025, வியாழக்கிழமை இரவு 11:59 வரை ஆன்லைன் படிவத்தை நிரப்ப முடியும்.
தாமதம் ஏற்பட்டால் அபராதம்!
- முன்னறிவிப்பு இல்லாமல் 10% அதிகரிப்பு
- முன்னறிவிப்புக்குப் பிறகு 30 நாட்களில் அறிவித்தால் 20% அதிகரிப்பு
- 30 நாட்களுக்கு மேலாக தாமதித்தால் 40% அதிகரிப்பு
- மறைந்துவைத்த செயல்பாடுகள் இருந்தால், முன்னறிவிப்பு இல்லாமல் 80% அதிகரிப்பு
- தாமதத்திற்கான வட்டி மாதம் ஒன்றுக்கு 0.20% வீதம் வசூலிக்கப்படும்.