பயணப் பொதிகளை போக்குவரத்தில் மறந்து விட்டால்....

20 வைகாசி 2025 செவ்வாய் 01:12 | பார்வைகள் : 211
பொதுமக்கள் போக்குவரத்துகளில் பயணப்பைகள் அல்லது பொருட்களை மறந்து தவறவிட்டால், அல்லது திட்டமிட்டு வைத்து விட்டு வெளியேறல் தொடர்பான சட்டங்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளன. பயணிகள் எதிர்கொள்ளக்கூடிய அபராதங்கள் இப்போது மூன்று நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன:
பொதுமக்கள் போக்குவரத்துகளில்
1. தவறுதலாக திடீர் என்று மறந்து விட்டால் (abandon involontaire)
அபராதம்: 450 யூரோக்கள்
அபராதச் சீட்டு (forfaitaire): 72 யூரோக்கள்
தவறுதலாக மறந்துவிட்டாலும் அதில் கட்டாயமாக உங்கள் பெயர் எழுதியிராவிட்டால்
(étiquetage obligatoire)
அபராதம்: 750
அபராதச் சீட்டு: 150
திட்டமிட்டு வைத்துவிட்டு வெளியேற முயற்சித்தால் (volontaire manifeste)
அபராதம்: 1,500 யூரோக்கள்
அபராதச் சீட்டு: 180யூரோக்கள்
பயண நிறுவனம் , சட்டப்படி, குறைந்த அபராதத்தை விதிக்கத் தீர்மானிக்கலாம்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள அபராதங்கள்:
SNCF 150 யூரோக்கள்
RATP (பாரிஸ் பேருந்துகள், மெட்ரோக்கள்): 150 இலிருந்து 375 யூரோக்கள் வரை அபராதம்.
சில பொதுப்போக்குவரத்து நிறுவனங்கள், பயணிகளுக்கு QR குறியீட்டைக் கொண்ட இலவச பாதுகாக்கப்பட்ட பெயரட்டை சேவையை வழங்கத் திட்டமிட்டு உள்ளன.
விமான நிலையங்களில்
பயணப் பொதிகளிற்கான வரி அதிகரிப்பைத் தவிர்ப்பதற்காக கூடுதலாக மக்கள் தங்கள் பொதிகளை விமான நிலையங்களில் விட்டு விடுகிறார்கள்.
இது ஒரு பெரும் பாதுகாப்பு பிரச்சனையாக விமான நிலையங்களில் விளங்குகிறது. ஆகையால், தற்போது விமான நிலைய அதிகாரிகள் 'உங்கள் பைகள் மறவாதீர்கள்' எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். அடிக்கடி அறிவித்தலும் செய்கின்றனர்.
தவற விட்டாலோ அல்லது வேண்டுமென்றே வைத்து விட்டுப் போனாலும் 450 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களின் பெயரும் எச்சரிக்கைப் பதிவில் பதியப்படும்.
பைகளை அல்லது பொதிகளை மறந்து விடுவது இன்று ஒரு பெரிய அபராதத்திற்கு வழிவகுக்கும் பாதுகாப்பு பிரச்சனையாக உள்ளது. எனவே உங்கள் பைகள் எப்போதும் தயாராகவும், பெயரிடப்பட்டதுமாக வைத்திருத்தல் வேண்டும்.