சொந்த மண்ணில் வெற்றிவாகை சூடிய பிரான்ஸ்!
20 வைகாசி 2016 வெள்ளி 10:18 | பார்வைகள் : 20364
யூரோகிண்ண உதைப்பந்தாட்டப்போட்டி பிரான்சில் நடைபெறுவது இது மூன்றாவது முறை. இதுவரை எந்த அணியும் தங்கள் சொந்த மண்ணில் இரண்டு முறைக்கு மேல் விளையாடவில்லை! பிரான்சில் நடைபெற்ற முந்தைய இரண்டு போட்டிகளினதும் சுருக்க வரலாறு:
1960 :
யூரோகிண்ண போட்டிகளின் முதலாவது போட்டி பிரான்சில் தான் நடைபெற்றது. 1960ஆம் ஆண்டு. இந்த போட்டியின் இறுதி ஆட்டம் பரிசின் Parc des Princes மைதானத்தில் நடைபெற்றது. Yugoslavia குழுவை எதிர்த்து ஆடிய சோவியத் யூனியன் அபார வெற்றி பெற்றது. 18 ஆயிரம் பார்வையாளர்கள் போட்டியை கண்டு களித்தனர்.
1984 :
மீண்டும் பிரான்சில் யூரோ கிண்ண போட்டிகள் 1984 ஆம் வருடம் பிரான்சில் நடைபெற்றது. 47 ஆயிரம் அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் ஸ்பெயினுக்கு எதிராக விளையாடிய பிரான்ஸ் முதன் முதலாக சொந்த மண்ணில் வெற்றிவாகை சூடியது.
இந்த வெற்றி பிரெஞ்சு மக்களிடையே பெருந்த சந்தோச அலையை உண்டாக்கியது. 1984 ஆம் ஆண்டுக்கு முன் மொத்தம் 6 போட்டிகள் நடைபெற்றிருந்தன. ஆனால் அவை எதிலுமே பிரான்ஸ் வெற்றி பெறவில்லை. சொந்த மண்ணில் முதல் வெற்றியை ருசித்தது பலத்த வரவேற்பை பெற்றிருந்தது.
2016 :
அதன் பின்னர், 26 வருடங்கள் கழித்து இந்த வருடம் தான் பிரான்சில் யூரோகிண்ண போட்டிகள் நடைபெற இருக்கிறது. நுழைவுச்சீட்டுக்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு முடிந்த நிலையில், சொந்த மண்ணில் மீண்டும் பிரான்ஸ் வெற்றி பெறுமா என உலகம் முழுவதும் உள்ள பிரெஞ்சு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.