’சிறைச்சாலைகளில் விளையாட்டுக்களுக்கு தடை!’ - நீதித்துறை அமைச்சரின் கோரிக்கை நிராகரிப்பு!!

20 வைகாசி 2025 செவ்வாய் 11:00 | பார்வைகள் : 557
சிறைச்சாலைகளில் கேளிக்கை விளையாட்டுக்களுக்கு தடை விதிக்கவேண்டும் என நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin வைத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ludiques எனும் வார்த்தையை பயன்படுத்தி ’சிறைக்கைதிகளுக்காக பொதுபோக்கு’ அனைத்தையும் தடை செய்ய வேண்டும் எனவும், கல்வி மற்றும் அறிவு சாராத எந்த பொழுபோக்குகளும் சிறைச்சாலைகளில் அனுமதிக்கக்கூடாது எனவும் அமைச்சர் கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். ஆனால் அது சிறைச்சாலைகளுக்கான சட்டத்துக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டு அந்த கோரிக்கையை Conseil d'Etat நிராகரித்தது.
அதேவேளை, அமைச்சரின் இந்த கோரிக்கைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. சிறைச்சாலைகளில் 150 வரையான செயற்பாடுகளுக்கு அனுமதிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.