Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரம் ஏன் உலக அதிசயமானது?!

ஈஃபிள் கோபுரம் ஏன் உலக அதிசயமானது?!

19 வைகாசி 2016 வியாழன் 10:30 | பார்வைகள் : 19508


 ஈஃபிள் கோபுரம் பற்றி பல தகவல்களை பிரெஞ்சு புதினம் ஏலவே வழங்கியிருந்தது. உலகின் ஏழு அதிசயங்களில் எப்போதும்  ஈஃபிள்  கோபுரம் இருந்து வருகிறது. ஏன்? அதிசயம் என சொல்வதற்கு மிக வலுவான காரணம் இருக்கிறது. 

 
முழுக்க முழுக்க இரும்பிலான ஈஃபிள் கோபுரத்தை கட்டுவதற்கு இரண்டு வருடங்கள் எடுத்துக்கொண்டது. கம்பீரமாக நிற்கும் இந்த கோபுரம் இத்தனை அழகாக, உயரமாக இருப்பதற்காகவெல்லாம் அதிசயம் ஆகவில்லை. மிகப்பெரிய ஒரு தொழில்நுட்பம் இதன் பின்னே புதைந்துள்ளது. 
 
மிக வேகமாக காற்று வீசினால் ஈஃபிள் வேரோடு சாய்ந்துவிடும் என அஞ்சிய Gustave eiffel (ஈஃபிள் கோபுரத்தை உருவாக்கியவர் பெயர்) அதற்காக ஒரு புது முயற்சியை மேற்கொண்டார். காற்று வீசும் போது அசைந்துகொடுக்கும் படி கோபுரத்தை உருவாக்கினார். இதை பலரால் நம்ப முடியவில்லை. ஆனால் அதுதான் உண்மை. ஈஃபிள் கோபுரம் 9 இஞ்ச் அகலம் வரை அசைந்து கொடுக்கும். 
 
ஆனால் கட்டப்பட்ட நாள் முதல் இதுவரை அவ்வப்போது அசைந்துவரும் ஈஃபிள், ஒரு தடவை கூட 6 இஞ்ச் அகலத்தை தாண்டி அசைந்ததில்லை. இதை எப்படி அப்போதே கணித்தார் ஈஃபிள் என்பதுதான் இங்கு அதிசயம். இது தொடர்பான பல தடவைகள் ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டது. இப்போது உலகம் முழுவது இருக்கும் பொறியாளர்கள் அனைவருக்கும் ஈஃபிள் கோபுரத்தின் இந்த தொழில்நுட்பம் ஒரு அத்தியாவசிய படிப்பினை! 
 
வெறுமனே இரும்புகளை வைத்து கட்டியதற்காகவெல்லாம் உலக அதிசயம் என்ற விருதை கொடுப்பார்களா என்ன??!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்