'நாங்க கிரிக்கெட்டும் விளையாடுவோம்' - ஒரு சோக கதை!
18 வைகாசி 2016 புதன் 13:02 | பார்வைகள் : 18921
பிரான்சுக்கு கிரிக்கெட் அணி ஒன்று இருக்கிறது என்றால் நம்புவதற்கு கஸ்டம் தான். ஆனால் அதைப்பற்றியெல்லாம் யார் அலட்டிக்கொள்வார்??! 'அது ஒரு போரிங் ஆங்கில விளையாட்டு!' என பிரெஞ்சு மக்கள் சொல்கிறார்கள்.
காலாகாலமாக உதைப்பந்தாட்டத்தில் ஊறிய மக்களை கிரிக்கெட் பாருங்கள் என்றால் யார் பார்ப்பார்கள்?! துடுப்பாட்ட வீரர்களையும் நடுவர்களையும் தவிர மைதானத்தில் வேறு யாரும் இருக்கமாட்டார்கள்!
ஆனால் பிரான்சுக்கு கிரிக்கெட் அணி ஒலிம்பிக் ஆரம்பித்த காலத்திலேயே வந்துவிட்டது. ஒலிம்பிக் போட்டிகளில் இருக்கும் முக்கிய விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்றாக இருந்தது. ஒலிம்பிக்கின் போதுகூட கிரிக்கெட் போட்டிகளை காண ஆள் இல்லை! அந்தோ பரிதாபம்.
பிரெஞ்சின் criquet எனும் வார்த்தையில் இருந்துதான் கிரிக்கெட் எனும் சொல்லே வந்தது. 1998ஆம் ஆண்டு தொடக்கம் ECC (European Cricket Council)
இல் அங்கம் வகித்துவரும் கிரிக்கெட் அணி, ஐரோப்பாவில் நடைபெறும் பல போட்டிகளில் விளையாடி வருகிறது. எந்த ஒரு போட்டிகளிலும் இரண்டாம் இடத்துக்கு கூட முன்னேறவில்லை. பின்னர் 2001ஆம் ஆண்டில் இருந்து ICC (International Cricket Council) இல் அங்கம் வகித்து வருகிறது. அங்கம் மட்டும்தான் வகிக்கிறது என்பதுதான் சோகம்.
சொல்ல மறந்துவிட்டோம். 1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் போது, பிரெஞ்சு கிரிக்கெட் அணி விளையாடி வெண்கல பதக்கம் பெற்றிருக்கிறது. ஆனால் முதலும் கடைசியுமாக அந்த வருடத்தோடு கிரிக்கெட் போட்டிகளை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கிவிட்டார்கள்.
இந்த பிரெஞ்சு கிரிக்கெட் அணி இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதுதான் மில்லியன் டொலர் கேள்வி..!!