ரவி மோகன் உடன் திருமணமா? கெனிஷாவின் புதிர் பதிவு

20 வைகாசி 2025 செவ்வாய் 18:19 | பார்வைகள் : 201
கோலிவுட்டில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக இருப்பது ரவி மோகன் - கெனிஷா ஜோடியின் காதல் விவகாரம் தான். நடிகர் ரவி மோகன், கடந்த ஆண்டு அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார். இவர்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனிடையே ரவி மோகன் தனது கேர்ள் பிரண்ட் கெனிஷா உடன் அண்மையில் திருமண விழாவில், ஜோடியாக கலந்துகொண்ட பின்னர் அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு ரவி மோகன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பின்னர் ஆர்த்தியின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரவி மோகனும் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார். அதில் ஆர்த்தியும் அவரது தாயும் தன்னை ஒரு தங்க முட்டையிடும் வாத்தை போல பயன்படுத்தியதாக குற்றம்சாட்டிய அவர், கெனிஷாவை தன் வாழ்வில் கிடைத்த சிறந்த துணை என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் தான் ஆர்த்தியை தான் பிரிய முடிவெடுத்துள்ளதாகவும், தன் பிள்ளைகளை அல்ல என்பதையும் ஆணித்தனமாக கூறி இருந்தார் ரவி மோகன்.
ரவி மோகனின் அறிக்கையை தொடர்ந்து அவரது ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் அறிக்கை வெளியிட்டு, ரவி மோகன் படத்துக்காக தான் 100 கோடிக்கு மேல் கடன் வாங்கி நஷ்டமடைந்ததாக கூறி இருந்தார். இப்படி இருதரப்புக்கும் இடையே அறிக்கை போர் நடந்து வரும் சூழலில், நடிகர் ரவி மோகனின் காதலி கெனிஷா தற்போது இன்ஸ்டாகிராமில் சூசக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் புதிய தொடக்கத்தை நோக்கி என குறிப்பிட்டு உள்ளார் கெனிஷா.
அதில், “இந்த சத்தங்களுக்கு நடுவே அமைதியான நம்பிக்கை ஒன்று காத்திருக்கின்றது. என் ஆன்மாவின் கஷ்டம் தனியாக நிற்கின்றது. அதே வேளையில் அவையெல்லாம் மன உறுதியை கொடுக்கிறது. தற்போதுள்ள சூழலில் நான் இசையை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறேன். காயங்களை எல்லாம் பாடங்களாக ஏற்றுக் கொள்கிறேன். நாளைய விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கின்றது", என குறிப்பிட்டுள்ளார்.