Paristamil Navigation Paristamil advert login

மீன் சமோசா

மீன் சமோசா

20 வைகாசி 2025 செவ்வாய் 18:19 | பார்வைகள் : 111


மீன் வகை உணவுகள் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன. மீன்களில் பல வகையான உணவுப்பொருள் செய்து சாப்பிட்டுருப்போம். இதுபோன்று மீனில் சமோசா செய்முறையை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: மீன், மைதா மாவு, உப்பு, எண்ணெய், தண்ணீர், பெரிய வெங்காயம், சிக்கன் மசாலா பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி உள்ளிட்ட பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும்.

மைதா மாவை பாத்திரத்தில் வைத்து, அதில் தேவையான அளவு உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக பிணைந்து கொண்டு ஒரு மணிநேரம் மூடி வைக்கவும்.

ஃபேன் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊறி காய வைத்து, பெரிய வெங்காயம் நறுக்கு பொன்னிரம் ஆகும் வரை வதக்கவும், சிக்கன் மசாலா பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி மற்றும் உப்பு சேர்த்து, நன்றாக மிக்ஸ் செய்து மசாலாவை தயாராக வைத்துக் கொள்ளவும்.

ஊறவைத்த மைதா மாவை எடுத்து சப்பாத்தி பிணைவது போன்று உருண்டை பிடித்து சப்பாத்தி கல்லில் வைத்து தேய்த்து, சமோசா வடிவத்தில் வைத்து அதில் மாலை போட்டு எண்ணெயில் பொறித்து எடுத்தால் மொறு மொறுப்பான மீன் சமோசா தயாராகிவிடும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்