Paristamil Navigation Paristamil advert login

10000 mAh பற்றரியுடன் ரியல்மி ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள், வெளியீடு மற்றும் எதிர்பார்ப்புகள்!

10000 mAh பற்றரியுடன் ரியல்மி ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள், வெளியீடு மற்றும் எதிர்பார்ப்புகள்!

20 வைகாசி 2025 செவ்வாய் 20:02 | பார்வைகள் : 128


கடந்த பத்து ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் சந்தையில் அதிவேக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. Samsung, Xiaomi, OnePlus போன்ற முன்னணி நிறுவனங்கள் புதுமையான தொழில்நுட்பங்களை தங்கள் ஸ்மார்ட்போன்களில் புகுத்தி வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன.

குறிப்பாக, ஸ்மார்ட்போன்களின் பற்றரி தொழில்நுட்பத்தில் பல்வேறு மேம்பாடுகள் மற்றும் சோதனைகள் நடந்து வருகின்றன.

இதன் விளைவாக, சமீபத்திய ஆண்டுகளில் 6000 mAh, 7000 mAh வரையிலான பெரிய பற்றரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகமாகியுள்ளன.

அந்த வரிசையில், தற்போது, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அதாவது 10000 mAh பேட்டரி திறனுடன் கூடிய ஒரு புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த புரட்சிகரமான கான்செப்ட்டுக்கான காப்புரிமையை பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி பெற்றுள்ளது.

அதிக பற்றரி திறன் கொண்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்போன் அளவில் பெரியதாகவோ அல்லது செங்கல் போன்று தடிமனாகவோ இருக்கும் என்று கவலைப்படத் தேவையில்லை.

அதிநவீன சிலிக்கான் பற்றரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த ஸ்மார்ட்போன் மிகவும் குறைவான எடை மற்றும் மெல்லிய வடிவமைப்பில் உருவாக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள ரியல்மி நிறுவனம், 10000 mAh பற்றரி திறன் மற்றும் 200 கிராம் எடையுடன் கூடிய ஒரு புதிய ஸ்மார்ட்போனை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக பற்றரி திறன் கொண்ட ஸ்மார்ட்போனை நாம் பார்ப்பது இது முதல் முறை அல்ல என்றாலும், இவ்வளவு அதிக திறனுடன், குறைவான எடை மற்றும் மெல்லிய வடிவமைப்பில் வருவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு, உறுதியான கட்டமைப்பு மற்றும் நீண்ட கால பயன்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

திட்டமிடப்பட்டுள்ள வடிவமைப்பின்படி, இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் வெறும் 8.5 மில்லிமீட்டர் தடிமனுடனும், 200 கிராம் எடையுடனும் இருக்கும்.

இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் அதிவேக சார்ஜிங் வசதியும் வழங்கப்படவுள்ளது. 100W திறன் கொண்ட சார்ஜிங் தொழில்நுட்பம் இதில் இடம்பெறலாம். பேட்டரியின் திறன் அதிகமாக இருப்பதால், 100W சார்ஜிங் வேகம் இருந்தாலும், இந்த ஸ்மார்ட்போன் முழுமையாக சார்ஜ் ஆக ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது குறித்து ரியல்மி நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்