Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்திலுள்ள நதிகளில் தண்ணீர் மட்டம் தொடர்பில் எச்சரிக்கை

சுவிட்சர்லாந்திலுள்ள நதிகளில் தண்ணீர் மட்டம் தொடர்பில் எச்சரிக்கை

20 வைகாசி 2025 செவ்வாய் 21:02 | பார்வைகள் : 172


சுவிட்சர்லாந்திலுள்ள நதிகளில் தண்ணீர் மட்டம் குறைந்துள்ளதைத் தொடர்ந்து மக்களுக்கு புதைமணல் தொடர்பில் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஓடும் Rhône மற்றும் Arve நதிகளில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால், சேறு அதிக அளவில் வெளியே தெரியத் துவங்கியுள்ளது.

ஆக, நதிக்கரையில் நடப்பவர்கள் அந்த சேற்றில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதாக பொலிசார் எச்சரித்துள்ளார்கள்.

நதிக்கரையில் வாக்கிங் செல்வது உட்பட அனைத்து விடயங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கைப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. என்றாலும், அங்கு மனித கால் தடங்களும், விலங்குகளின் பாதங்கள் பட்ட அடையாளமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நதிக்கரையில் இப்போது நடப்பது சேற்றில் சிக்கிக்கொள்ளும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும், அப்படி சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றுவதும் கடினம் என்று கூறும் பொலிசார், நதிக்கரைகளை தவிர்க்குமாறு மக்களை எச்சரித்துள்ளார்கள்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்