சிகரம் தொட்ட மனிதர்கள் - Charles de Gaulle!
16 வைகாசி 2016 திங்கள் 12:08 | பார்வைகள் : 20661
ஒருவன் தன் நாட்டின் மேல் எத்தனை பற்றாக இருக்க முடியும்?? தன் தளரா மனதால் சிகரம் தொட்ட Charles de Gaulle இன்றைய சிகரம் தொட்ட மனிதராக......!!
பிரெஞ்சு ஜனாதிபதி சார்ள்ஸ் ஆரம்பத்தில் இராணுவ வீரனாக இருந்தவர். பின்நாட்களில் இராணுவ தளபதியாகி, பிரதமதராகி, பிரெஞ்சு நாட்டின் ஜனாதிபதியும் ஆனார்.
22ம் திகதி, நவம்பர் மாதம், 1890ஆம் ஆண்டு Lille நகரில் பிறந்தார் சார்ள்ஸ். இவரின் தந்தை ஒரு விரிவுரையாளர். அப்பாவின் போதனைகளும், பிரான்ஸ் தொடர்பான வரலாறுகளும் இவரை பிரெஞ்சு இராணுவத்தின் பால் இழுத்தது. அதன் பின்னர் தன் பதினோராவது வயதில் பரிசுக்கு குடும்பத்துடன் வந்த சார்ள்ஸ், பரிசின் இராணுவ பள்ளிக்கூடமான Saint-Cyr military academy ல் சேர்ந்து படிப்பை 'வளரும் இராணுவ வீர'னாக தொடர்ந்தார்.
சார்ள்ஸ், 1912 ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்தார். சேர்ந்து இரண்டு வருடங்களில் முதலாம் உலகப்போர் தொடங்கியது. தேசப்பற்று அதிகம் கொண்ட சார்ள்ஸ் கடுமையாக யுத்த களத்தில் சண்டையிட்டார். ஆனால் வரலாறு வேறு பக்கம் திரும்பியது. சார்ளசை ஜென்மன் படை வீரர்கள் பிடித்துக்கொண்டுபோய் சிறை வைத்துவிட்டார்கள். அதை அவரால் ஜீரணிக்கமுடியவில்லை. ஐந்து தடவைகள் சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்து, அது தோல்வியில் முடிந்தது.
முதலாம் உலகப்போர் ஒரு முடிவுக்கு வரும் வரை சார்ள்ஸ் சிறையிலேயே இருந்தார். 'தன் நாட்டுக்காக எதுவும் செய்ய முடியவில்லையே ஐய்யோ!' என ஜெர்மன் மீது தீரா கோபம் கொண்ட சார்ள்ஸ், அமைதியை கடைப்பிடித்து, முதலாம் உலகப்போர் முடிவடைந்து, சிறையில் இருந்து விடுதலையாகி மீண்டும் பிரெஞ்சு இராணுவத்தில் வந்து சேர்ந்துகொண்டார்.
போர் தந்திரங்களை உருவாக்கி, யுத்த களத்தில் எப்படி போர் புரிய வேண்டும் என பல திட்டங்களை வகுத்தார் சார்ள்ஸ். அதே வேளை ஜெர்மனியின் எதோ ஒரு மூலையில் சார்ள்ஸ்சின் எதிரி உருவாகிக்கொண்டிருந்தார். அவர் பெயர் அடோப் ஹிட்லர்!!
(தொடரும்..)