யாழ்ப்பாணத்தில் கிருமித் தொற்றினால் இளம் குடும்பஸ்தர் பலி

21 வைகாசி 2025 புதன் 10:10 | பார்வைகள் : 239
யாழ்ப்பாணத்தில் கிருமித் தொற்றினால் இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் ஒருவர் திங்கட்கிழமை (19) உயிரிழந்துள்ளார்.
ஆனைக்கோட்டை கூழாவடியைச் சேர்ந்த நாகையா நிரோஜன் (வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு கடந்த 17ஆம் திகதி உடல் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
கிருமித் தொற்றினால் உடற்கூறுகள் செயலிழந்து மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.