தனுஷ் நடித்த ‘குபேரா’ திரைப்படம் வசூல் சாதனை செய்யுமா?

21 வைகாசி 2025 புதன் 13:16 | பார்வைகள் : 226
தனுஷ் நடித்த ‘குபேரா’ திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்நிலையில், ரிலீஸுக்கு முன்பே இந்த படம் ரூ.50 கோடி பிசினஸ் செய்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள ‘குபேரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது.
ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், முக்கிய கேரக்டரில் நாகார்ஜுனா நடித்துள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 20 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தை தமிழகத்தில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பதும், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமேசான் ப்ரைம் நிறுவனம் ‘குபேரா’ திரைப்படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளதாகவும், இதற்காக ரூ.50 கோடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால், வசூலில் சாதனை செய்யும் என டிரேடிங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.