Paristamil Navigation Paristamil advert login

"பிரான்ஸ் vs இங்கிலாந்து" - நூறுவருட மகாயுத்தம்!!

15 வைகாசி 2016 ஞாயிறு 10:01 | பார்வைகள் : 20109


ஐரோப்பாவில் இடம்பெற்ற மிகப்பெரிய யுத்தம் எது??! முதலாம் உலகப்போர்? இல்லை... இரண்டாம் உலகப்போர்?? இல்லை... பின்??
 
ஐரோப்பாவில் இடம்பெற்ற மிகப்பெரும் யுத்தம் 600 வருடங்கள் பழமையானது. பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இடம்பெற்றது. யுத்தம் என்றால் ஐந்து ஆறு வருடங்கள் நடைபெற்ற யுத்தம் அல்ல... நூறு வருடங்கள் நடைபெற்ற யுத்தம் அது! 
 
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், 1962ஆம் ஆண்டு, ஜனாதிபதி Charles de Gaulle இவ்வாறு தெரிவித்தார், 'உண்மையில் ஜெர்மனி எங்கள் எதிரி இல்லை.. இங்கிலாந்து தான் எங்கள் நீண்ட கால எதிரி!' 
 
யுத்தம் ஆரம்பித்தது 1337 ஆம் ஆண்டு. இங்கிலாந்து அரசனுக்கும், பிரெஞ்சு மன்னனுக்கும் இடையே இருந்த அரசாட்சி பிரச்சனையே பிரதான காரணம். ஆனால் இதற்குள் வேறு பல பிரச்சனைகள் கிளை விட்டு... விட்டு.. விட்டு...  1453 ஆம் ஆண்டு வரை இந்த யுத்தம் நீண்டு விட்டது. அதாவது மொத்தம் 116 வருடங்களாக  இங்கிலாந்தும் பிரான்சும் 'அஜித் - விஜய்' ரசிகர்கள் போல் அடித்துக்கொண்டனர். 
 
அத்தனை எளிதாக விபரிக்க முடியாத அளவு பிரச்சனைகள் உருவெடுத்தன. ஒவ்வொரு நாடும் துணைக்கு வேறு சில நாடுகளை சேர்த்துக்கொண்டது. மன்னர்கள் மாறிக்கொண்டு வந்தாலும் யுத்தம் முடிவுக்கு வரவில்லை. இந்த யுத்தத்தின் போது பயன்படுத்திய ஆயுதங்கள் சிலவற்றை லூவர் அருங்காட்சியகத்தில் பார்வையிடலாம். 
 
முதலாம், இரண்டாம் உலகப்போர்கள் போல் மில்லியன் கணக்கில் உயிர் அழிவுகள் இல்லை என்றாலும், 100 வருடங்களுக்கு மேலாக யுத்தம் இடம்பெற்று மக்களுக்கு நிம்மதியையும், பொருளாதாரத்தையும் சிதைத்தது என்பது நினைவுகூறத்தக்கது!
 
பிரான்சின் தேசிய வீராங்கனையாகிய Jeanne D'arc வீரச்சாவினைத் தழுவியதும் இந்த போரின் போதுதான்...!!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்