பத்தகலோன் - 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு!'
14 வைகாசி 2016 சனி 11:19 | பார்வைகள் : 18827
பயங்கரவாதிகளின் தாக்குதலால் மூடப்பட்டிருக்கும் பத்தகலோன் அரங்கின் சிறப்பம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா??! தெரிந்துகொள்வோம் வாருங்கள்!
*1864ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்து, அடுத்த வருடமே, 3ம் திகதி பெப்ரவரி மாதம் 1865ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது இந்த அரங்கு. 150 வருடங்களுக்கு மேலாக இசை மழை பொழிந்து வருகிறது பத்தகலோன்.
* பத்தகலோன் ஒரு திரையரங்கு. ஆனால் அங்கு திரைப்படங்கள் திரையிடப்பட்டதை விட, இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது தான் அதிகம். இந்த அரங்கை பாடகர் Paulus, 1892 ஆண்டு விலைக்கு வாங்கினார். அதன் பின்னர் பலபேரால் வாங்கப்பட்டும் விற்கப்பட்டும் வந்திருக்கிறது பத்தகலோன்.
*இசை நிகழ்ச்சிகளை தவிர்த்து, வேறு பல நிகழ்ச்சிகளும் இங்கு அரங்கேறியிருக்கிறது. மேடை நாடகங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், ஏன்... 'மேஜிக்' நிகழ்ச்சிகள் கூட இங்கு நடைபெற்றிருக்கிறது.
*பத்தகலோன் இசை நிகழ்ச்சிகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக 'Rock Metal' வகை இசை நிகழ்ச்சிகளுக்கு ஐரோப்பாவிலேயே சிறந்த அரங்கு பத்தகலோன் தான்.
* சமீபத்தில் இறந்த இசை ஜாம்பவான் 'பிரின்ஸ்' உட்பட, Backstreet Boys, Velvet Underground, The Clash, Snoop Dogg என பிரெஞ்சு கலைஞர்கள் மட்டுமில்லாது அமெரிக்க, பிரித்தானிய, ரஷ்ய இசைக்கலைஞர்கள் பலர் இங்கு நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளனர்.
*இவ்வளவு பெருமை மிகுந்த பத்தகலோனுக்கு இன்னொரு பேர் இருக்கு! "Grand Café Chinois" என்பதே அது. 'Chinoiserie' எனும் சீன நாட்டு கலைவடிவத்தை பிரதானமாக கொண்டு கட்டப்பட்டதாலேயே இதற்கு இப்படி ஒரு பெயர்.
*கடந்த நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் இங்கு தாக்குதல் நடத்தியதால் இன்றுவரை மூடப்பட்டிருக்கிறது பத்தகலோன் அரங்கு!