Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு 'ஸ்பைடர் மேன்'!!

பிரெஞ்சு 'ஸ்பைடர் மேன்'!!

12 வைகாசி 2016 வியாழன் 10:48 | பார்வைகள் : 18436


ஐம்பது வயதில் நீங்கள் என்ன செய்வீர்கள்... பேரப்பிள்ளைய அழைத்துக்கொண்டு மாலை நேரங்களில் ஒரு 'வோக்கிங்' போய் வருவீர்கள்... ஆனால் இங்கு ஒருவர் இருக்கும் கட்டிடங்களில் எல்லாம் ஏறுகிறார்... தாவுகிறார்... !! 
 
அவரின் பெயர் Alain Robert. 7 August 1962 ஆண்டு, பிரான்சின்  Bourgogne பகுதியில் பிறந்த இவருக்கு இந்த வருடத்துடன் 53 வயது நிறைவடைகிறது. இது ஒருபுறம் இருக்கட்டும்.. இவரின் வேலைகளுக்கும் வயதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. 
 
இவர் என்ன செய்கிறார்??! உலகில் இருக்கும் உயரமான கட்டிடங்களில் எல்லாம் ஏறுகிறார். கட்டிடத்தின் மேல் பகுதியில் கட்டப்பட்ட ஒரு கயிறு.. ஒரு சோடி சப்பாத்துக்கள்.. இரண்டும் தான் இவருடைய உபகரணங்கள். கண்ணுக்கெட்டாத உயரத்தில் இருக்கும் கட்டிடத்தின் உச்சிவரை அனாயசமாக ஏறுகிறார். 
 
டுபாயின் Burj Khalifa கட்டிடம், பிரான்சின் ஈஃபிள் கோபுரம், சிட்னியின் Opera House மற்றும் Montparnasse என உலகம் அறிந்த அத்தனை கட்டிடங்களில் எல்லாம் ஏறுகிறார்... ஏறுகிறார்... ஏறிக்கொண்டே தான் இருக்கிறார். 
 
1997ஆம் ஆண்டு, கோலாலம்பூரின் Petronas இரட்டை கோபுரத்தில் ஏறிக்கொண்டிருக்கும் போது, 60 வது தளத்தில் கைது செய்யப்பட்டார். அபுதாபியின் தேசிய வங்கி கட்டிடத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட 2003ல் ஏறினார். ஒருதடவை 'ஸ்பைடர் மேன்' திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக Lloyd's கட்டிடத்தில் ஏறினார். அதற்காக அவருக்கு 18 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டது.. 
 
ஷங்காய், மோஸ்கோ, மெக்ஸிக்கோ, அபுதாபி, லண்டன், நியூ யார்க், மலேசியா என இவர் போகாத நகரம் இல்லை... ஏறாத கட்டிடங்கள் இல்லை..! 
 
பல கட்டிடங்கள், பல சாதனைகள், பல கைதுகள், பல விருதுகள், பல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் என இவருக்கு கிடைத்தது எல்லாமே 'பல'மானவை தான்!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்