Paristamil Navigation Paristamil advert login

தீபன் - தமிழர்களுக்கான பிரெஞ்சு திரைப்படம்! (பகுதி 2)

தீபன் - தமிழர்களுக்கான பிரெஞ்சு திரைப்படம்! (பகுதி 2)

11 வைகாசி 2016 புதன் 14:52 | பார்வைகள் : 19811


உலகின் தலைசிறந்த திரைப்பட உருவாக்கலில் பிரெஞ்சு திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் பலத்த வரவேற்பு எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு காலங்களிலும்... உலக பிரச்சனைகளை தங்கள் திரைப்படங்கள் மூலம் உணர்வு குறையாமல் சொல்வதில் பிரெஞ்சு இயக்குனர்கள் பலே கெட்டிக்காரர்கள். இப்படிப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் தான் Jacques Audiard. 
 
'தீபன்' - கடந்த வருடம் பிரெஞ்சில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம். சாதாரண மனிதர்களின் நடவடிக்கையை... உணர்வுகளை மிக நுணுக்கமாக கவனிப்பவர் தான் இயக்குனர் Jacques Audiard. அப்படி, அவர் கண்ணில் பட்டவர்கள் தான் பிரான்சில் வசிக்கும் ஈழத்தமிழர்கள். அவரின் அடுத்தபடத்திற்கான கதாநாயகர்கள். 
 
தனக்குள் எழுந்த கதையை, நண்பர்களான Thomas Bidegain மற்றும்
Noé Debré உடன் சேர்ந்து விறுவிறுப்பான திரைக்கதையாக்கினார். எழுத்தாளர் ஷோபாசக்தி என்று அறியப்படும் அந்தோனிதாசன் ஜேசுதாசன் கதை தொடர்பாக மேலும் உதவி செய்து, இப்படத்தின் கதாநாயகனும் ஆனார். 
 
வெறும் இருபத்து ஆறே வயதுடைய Nicolas Jaar இடம், இப்படத்திற்கான பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளை ஒப்படைத்தார். வயதுக்கு மீறிய திறமையால், படத்தின் பின்னணி இசை பெரும் பாராட்டப்பட்டது. 
 
இப்படத்தில் தீபன், சிவதாசாக அந்தோனிதாசன் ஜேசுதான் , யாழினியாக காளீஸ்வரியும் இளையாளாக க்ளாடினும் நடித்திருந்தார்கள்.  அந்தோனிதாசனின் இயல்பான நடிப்பும், காளீஸ்வரியின் முகபாவனைகளும் படத்திற்கு உயிரூட்டின. 
 
எட்டு மில்லியன் யூரோக்களுக்கு தயாரான இத்திரைப்படம்... பல நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. மேலும் பிரெஞ்சு தேசத்தின் உயரிய விருதான, Palme d'Or விருதை கேன்ஸ் திரைப்பட விழாவில் பெற்றுக்கொண்டது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்