Cannes திரைப்பட விழா - சினிமாவுக்கான உயரிய விருது!! (பகுதி 1)
10 வைகாசி 2016 செவ்வாய் 10:24 | பார்வைகள் : 20307
உலகம் முழுவதும் சினிமாவுக்காக வழங்கப்படும் விருதுகளில் Cannes விருதுகளுக்கு தனி இடம் உண்டு. எந்த வித 'காம்ப்ரமைஸ்'களும் செய்யாமல் திறமைக்கு மாத்திரமே வழங்கப்படும் கெளரவமாகும்.
வருடம் தோறும், பிரான்சின் Cannes நகரில் வைத்து வழங்கப்படுகிறது இவ்விருது. கடந்த 2002ஆம் ஆண்டு வரை இவ்விருது Festival international du film (சர்வதேச திரைப்பட விருதுகள்) என்றே அழைக்கப்பட்டது. பல முக்கிய வரலாறுகளை சுமந்து வந்த இந்த Cannes திரைப்பட விருது விழாவை இரு பகுதிகளாக பார்க்கலாம்.
Cannes நகரில் நடப்பதால் 'Cannes திரைப்பட விருது' என்று அழைக்கப்படுகிறதே தவிர, விருதுகளுக்கு பெயர் அதுவல்ல. Palme d'Or மற்றும் Grand Prix என இரு விருதுகள் வழங்கப்படுகின்றன.
செப்டம்பர் 1, 1939 ஆண்டு, சர்வதேச திரைப்பட விழாவை Cannes நகரில் நடத்த ஆரம்பித்தார்கள். ஆனால் அடுத்த நாளே அவசரமாக இந்த நிகழ்வு நிறுத்தப்பட்டது. காரணம் அப்போது இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. நாஜி படைகள் பிரான்சுக்குள் புகுந்ததால் இடைநிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் செப்டம்பர் 1ம் திகதி, 1946 ஆம் ஆண்டு முதல் முழு நீள திரைப்பட விழா வெற்றிகரமாக நடைபெற்றது. 1948, 1949, 1950 கடுமையான நிதி பிரச்சனை காரணமாக இவ்விழா நிறுத்தப்பட்டிருந்தது.
1951 ஆம் ஆண்டு, செப்டம்பரில் இருந்து, மே மாதத்திற்கு திரைப்பட விழா மாற்றப்பட்டது.
கடந்த வருடம் நடைபெற்ற Cannes திரைப்பட விழாவில் 143 நாடுகள் கலந்துகொண்டிருந்தன. விருதுகளை தாண்டி, திரைப்படங்களை திரையிடப்படுவதே மிகப்பெரும் கெளரவமாக கருதப்படுகிறது.
முதல் விருது ' Union Pacific' அமெரிக்க திரைப்படத்திற்காக, இயக்குனர் Cecil B. DeMille அவர்களுக்கு 1939ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அந்த வருட விழாவில் வழங்கப்பட்ட ஒரே விருது இந்த விருதுதான்.
கடந்த வருடம், சிறந்த பிரெஞ்சு திரைப்படமாக Deepan (தீபன்) திரைப்படம் தேர்வாகி, இயக்குனர் Jacques Audiardக்கு Palme d’Or விருது கிடைத்தது. தீபன் திரைப்படம் ஈழத்தமிழர்களை பற்றி பேசிய படம். விருது வாங்கும் அளவிற்கு அந்த திரைப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது??!! நாளை பார்க்கலாம்.