Paristamil Navigation Paristamil advert login

பிரான்சின் மூவர்ண கொடி பிறந்த கதை!

பிரான்சின் மூவர்ண கொடி பிறந்த கதை!

8 வைகாசி 2016 ஞாயிறு 10:40 | பார்வைகள் : 21171


பிரான்சின்  தேசிய கொடியை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.  நீலம், (30%) வெள்ளை,(33%) சிவப்பு (37%) என முறையே  மூன்று வர்ணங்களில் இருக்கும் அந்த கொடி. ஆனால் அந்த கொடி வருவதற்கு முன்னர்... மொத்தமாக பன்னிரெண்டு வித கொடிகளை பிரெஞ்சு அரசு பயன்படுத்தியிருக்கிறது. இப்போது பயன்பாட்டில் உள்ள கொடி பெப்ரவரி மாதம் 15ம் திகதி, 1794ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
மூன்று வர்ணங்களுக்கும் காரணங்கள் இருக்கிறது. நீலம் 'சுதந்திர'த்தையும், வெள்ளை 'சமத்துவ'த்தையும், சிவப்பு 'சகோதரத்து'வத்தையும் பிரதிபலிக்கிறது. 
 
12ஆம் நூற்றாண்டில் இருந்து பிரான்சின் தேசியக்கொடி மாற்றம் பெற்றுக்கொண்டே வந்தது. நீல நிறத்தில் மஞ்சள் பூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட கொடிகள் மட்டும் நான்கு இருந்திருக்கின்றன. 
 
பின்னர் நீல நிறத்தை நீக்கிவிட்டு, வெறும் மஞ்சள் நிற பூக்களை கொண்ட கொடியை தேசியக்கொடியாக அறிவித்தார்கள். 
 
சிறிது காலத்தில், அந்த மஞ்சள் பூக்களையும் நீக்கிவிட்டு, வெறுமனே வெள்ளை நிறத்தை தேசிய கொடியாக அறிவித்தார்கள். அதாவது சதுரமாக வெட்டப்பட்ட ஒரு வேட்டித்துண்டு என்று வைத்துக்கொள்ளுங்கள். 1814 ஆம் ஆண்டில் இருந்து 1830 ஆம் வருடம் வரை இதுதான் தேசியக்கொடி! 
 
பின்னர் தான் தற்போது பயன்பாட்டில் இருக்கும் மூவர்ணக்கொடியை உருவாக்கினார்கள்.  பிரான்சின் அடையாளமாக நீல நிறமும், சிவப்பும் இருந்து வருகிறது. இந்த நிறங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட சின்னங்கள் பிரான்சில் அதிகம் உள்ளன. பிரெஞ்சு தேசியக்கொடியிலும் இந்த வர்ணங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என 1794 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் இப்போது நாம் பயன்படுத்தி வரும் மூவர்ண கொடி!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்