Paristamil Navigation Paristamil advert login

L'Oréal - அழகு சாதனப்பொருட்களின் ராஜா!

L'Oréal - அழகு சாதனப்பொருட்களின் ராஜா!

7 வைகாசி 2016 சனி 12:16 | பார்வைகள் : 18892


 
 
உலகம் முழுவதும் உள்ள அழகு சாதனப்பொருட்களில் L'Oréal தான் என்றும் ராஜா! உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிளைவிட்டிருக்கும்
 இந்த நிறுவனத்தின் வருமானத்தை கைவிரல்கள் கொண்டு எண்ண முடியாது! இதோ... L'Oréal பற்றிய சில 'ராபிட் - ஃபயர்' தகவல்கள் !!
 
* L'Oréal நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது 1909ஆம் வருடம். நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது தலைமுடி 'டை' விற்பனை செய்து வந்தார்கள். பின்னாளில் 'மிக பாதுகாப்பான டை' என உத்தரவாதம் பெற்றதும் விஸ்பரூபம் எடுத்தது L'Oréal.
 
* முதலாம், இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும், அழகு சாதனப்பொருட்களை தயாரிக்க ஆரம்பித்தது L'Oréal. பிரத்யேகமான மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பலரை வேலைக்கு நியமித்து உலகின் தலைசிறந்த அழகுசாதனப் பொருட்களை தயாரிக்கத்தொடங்கியது. 
 
*பிரான்ஸ் முழுவதும் விற்பனை சூடு பறக்க, பல தேசங்களுக்கு கிளை விரித்தது. ஆனால் ஒவ்வொரு தேசத்துக்கும் வேறு வேறு தரத்தில் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்களின் தட்பவெட்ப காலநிலை, தோல்களின் வேறுபாடு என்பதால் பிரான்சில் தயாரிக்கும் பொருட்களை வேறு நாடுகளில் விற்பனை செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டன. 
 
* இதனால் சோர்ந்துபோகாமல், வேறுவிதமாக சிந்தித்தது L'Oréal. உலகம் முழுவதும் ஆராய்ச்சி மையங்களை திறப்பதற்குரிய மிகப்பிரம்மாண்டமான 'ஐடியா' அது! இன்று, L'Oréal உலகம் முழுவதும் ஆறு ஆராய்ச்சி மையங்களை திறந்து ஒவ்வொரு நாட்டின் மக்களுக்கேற்ப தயாரிப்புகளை தயாரிக்கிறது. இந்த 'லிஸ்ட்'டில் இறுதியாக சேர்ந்து கொண்டது இந்தியா! 2005ஆம் ஆண்டு இந்தியாவில் ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டது. இன்றைய திகதியில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயை விளம்பர தூதராக கொண்டு அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது L'Oréal. 
 
* 2000 ஆண்டு பகுதியில் L'Oréal நிறுவனத்தின் ஸ்லோகன் 'Because I'm worth it' (ஏனென்றால் நான் தகுதியானவன்) ஆக இருந்தது. பின்னாட்களில் இதை, 'Because you're worth it' ( ஏனென்றால் நீங்கள் தகுதியானவர்கள்) என மாற்றிக்கொண்டது. 
 
* 2012ல், நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களை கொட்டி, இந்தோனேசியாவில் மிகப்பெரும் தொழிற்சாலையை அமைத்தது. அங்கு தயாரிக்கப்படும் பொருட்களில் 25 வீதமானவை உள்நாட்டிலும், மீதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் வருகிறது. 
 
* L'Oréal நிறுவனம், ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள பல முக்கிய நிறுவனங்களை வாங்கி குவித்துள்ளது. இதற்காகவே பில்லியன் கணக்கில் பணத்தை செலவு செய்துள்ளது. L'Oréal நிறுவனத்தால் வாங்கப்பட்ட மற்றைய நிறுவனங்களை எண்ணி கரைகாண முடியாது. 
 
* 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி, L'Oréal நிறுவனத்தில் 78,600 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இதன் தலமைச்செயலகம் 41, rue Martre, 92110 Clichy, France எனும் முகவரியில் அமைந்துள்ளது. 
 
* மேலும், இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம், லாபம், பங்கு என்பதையெல்லாம் எழுத நேர்ந்தால் வாய்ப்பாடு அட்டையை பார்ப்பதுபோல் இருக்கும். அதனால் வேண்டாம். Forbes இதழ் வெளியிட்ட பிரான்சில்  பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார் இவர்.  மேலும் L'Oréal நிறுவனத்தின் தலைவர் ஆகும்.  பெண்மணிக்கு இந்த வருடம் 93 வயதாகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்