Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் வீசிய குண்டுகள் ஏன் வெடிக்கவில்லை?

பிரான்ஸ் வீசிய குண்டுகள் ஏன் வெடிக்கவில்லை?

6 வைகாசி 2016 வெள்ளி 12:37 | பார்வைகள் : 19802


முதலாம் உலகப்போர் 1914 தொடக்கம் 1918 வரையான காலப்பகுதியில் நடைபெற்றது. எண்ணற்ற உயிர்கள், பொருட் சேதங்கள் என பல விளைவுகளை சந்திக்கவேண்டியதாயிற்று. இன்று,  1915ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை பற்றி பார்க்கலாம். 
 
1915ம் வருடம், பிரான்ஸ் - ஜேர்மன் படைகளுக்குள் உக்கிரமான யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. குறிப்பிட்ட நாள் ஒன்றில், ஜெர்மனியின் எல்லைக்குள் ஜெர்மன் படை வீரர்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பிரான்சின் விமானம் மேலே வட்டமிடுகிறது. 
 
வட்டமிட்ட விமானம் சரேல்ல்ல் என தரையை நோக்கி வந்து பாரிய குண்டுகளை வீசிவிட்டு, மேலெழும்பி சென்றது. திடீரென குண்டுகள் வீசப்படுவதை பார்த்த ஜெர்மன் வீரர்கள் நடுநடுங்கிவிட்டனர். 
 
ஆனால் அந்த குண்டுகள் வெடிக்கவில்லை!! 
 
சிதறி சென்ற வீரர்கள், குண்டுகள் வெடிக்காததை பார்த்து குழப்பத்தில் ஆழ்ந்தனர். ஏதேனும் புதிய தொழில்நுட்பமாக இருக்குமோ??!! அருல் சென்றால் தான் வெடிக்குமோ??! என ஏக குழம்பம் நிலவியது!! 
 
நீண்ட நேரம் வெடிக்காததால், இராணுவ வீரர்கள் அருகில் சென்று பார்த்தனர். அங்கு வீசப்பட்டிருந்தது வெடிகுண்டுகள் அல்ல. மாறாக காற்று கொஞ்சமாக அடிக்கப்பட்ட பெரிய அளவிலான உதைப்பந்துகள். கொஞ்சமாக காற்று நிரப்பப்பட்டிருந்ததால் அந்த பந்துகள் தரையில் பட்டு மேல் எழும்பவில்லை. சரி, ஏன் பந்தை வீசினார்கள்??! விழுந்து கிடந்த ஒவ்வொரு பந்திலும் April Fool என எழுதப்பட்டிருந்தது. தாங்கள் முட்டாள்கள் ஆக்கப்பட்டிருக்கிறோம் என ஜெர்மனி இராணுவ வீரர்கள் தெரிந்துகொண்டார்கள். 
 
குண்டு வீசப்பட்ட நாள் ஏப்ரல். 1. 1915ம் வருடம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்