Paristamil Navigation Paristamil advert login

ஒரு மாதத்துக்கு மேல் தண்ணீரில் மூழ்கியிருந்த பிரான்ஸ் - ஒரு சோக வரலாறு!

ஒரு மாதத்துக்கு மேல் தண்ணீரில் மூழ்கியிருந்த பிரான்ஸ் - ஒரு சோக வரலாறு!

4 வைகாசி 2016 புதன் 10:49 | பார்வைகள் : 19742


கடந்த வருட கடைசியில், தமிழ்நாட்டின் சென்னை மாநகரம் பெரும் வெள்ளத்தில் மூழ்கியது அவ்வளவு எளிதில் மறக்க முடியாதது. அப்படி வெள்ளப்பெருக்கு பரிசுக்கும் ஒரு காலத்தில் வந்திருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல... மொத்தமாக 35 நாட்கள் பரிஸ் இந்த பெரும் வெள்ளத்தில் தத்தளித்தது. பரிசை விட்டு வெளியேறவும் முடியாமல்.. பரிசுக்குள்ளும் இருக்கமுடியாமல்... ஐய்யோ அது பெருஞ்சோகம்!! 
 
1910 ஆம் வருடத்தின் ஆரம்ப நாட்கள் அவை. பரிசில் தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருந்தது. மழையை சமாளிக்க தேவையான ஆயத்தங்களை மக்கள் செய்துகொண்டிருந்தனர். முதல் நாள் மழை பேரழகாக இருந்தது. பின்னர் தொடர்ச்சியாக பெய்த மழை பரிஸ் மக்களுக்கு பேரிடியாய் போனது. 
 
பெய்த மழையின் தண்ணீர் எல்லாம் வடிகால்கள் வழியே சென் நதியில் சேர்ந்துகொண்டது. ஆனால் மழைதான் நிற்கவில்லை. சென் நதி நிரம்பத்தொடங்கியது. மக்கள் கவலை கொள்ள ஆரம்பித்தனர். வருண பகவான் கருணை காட்டுவார் எனும் நம்பிக்கை பொய்த்தது. மழை.. அடை மழை.. பேய் மழை.. கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்த்தது.  ஜனவரி மாதம் 28ம் திகதி, 1910ம் ஆண்டு.. தரையில் இருந்து 19  அடி உயரத்துக்கு தண்ணீர் உயர... மொத்த பரிசும் வெள்ளத்தில் மிதந்தது. 
 
சுரங்க பாதைகள், போக்குவரத்து, மின்சார தடை, உணவு பொருட்கள் தட்டுப்பாடு... என எண்ணற்ற இடர்கள் ஒரு சேர வந்து சேர்ந்தது பரிஸ் மக்களுக்கு. சென் நதி நிரம்பியதலும்... பிரான்சை தாண்டி பல இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யதாலும் வெள்ளம் வடியாமல் தேங்கி நிற்க தொடங்கியது. 
 
பிரெஞ்சு காவல்துறை, இராணுவம், தீயணைப்புத்துறை என அனைத்தும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மொத்தமாக 35 நாட்கள் எடுத்துக்கொண்டது வெள்ளம் வடிந்தோட.! இந்த நீங்கா சோகத்தில் இருந்து பரிஸ் மக்கள் விடுபட சில வருடங்கள் எடுத்துக்கொண்டது. 
 
இந்த வெள்ளப்பெருக்கின் போது உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது பெரும் ஆறுதல்.  மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நான்கு வருடங்கள் எடுத்துக்கொண்டது.  ஆனால் அப்போது பிரெஞ்சு மக்கள் மீது, எதிர்பாரா விதமாக ஜெர்மன் போர் விமானங்கள் குண்டு வீசியது. ஆம், அப்போது முதலாம் உலகப்போர் தொடங்கியிருந்தது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்