Paristamil Navigation Paristamil advert login

ஆர்காசோன் குளத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்த விபத்தும் போதைப்பொருளும்!!

ஆர்காசோன் குளத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்த விபத்தும் போதைப்பொருளும்!!

24 வைகாசி 2025 சனி 14:10 | பார்வைகள் : 217


Arcachon குளப்பகுதியில் உள்ள Cercle de la Voile d’Arcachon அருகே பிற்பகல் 3:30 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

8 வயது சிறுவன் 'Optimist' என்ற சிறிய தன்னிச்சை படகில் தனியாகச் சென்ற சென்றபோது, ஒரு மீன்பிடி படகுடன் மோதி, இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி படகுடன் மோதிய மீனவர், கொகைன் மற்றும் கஞ்சா எடுத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

'தற்செயலான கொலை' (homicide involontaire) என்ற குற்றச்சாட்டின் கீழ்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, மேலதிகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பாடசாலைச் சுறு;றுவா சென்ற இந்தச் சிறுவனின் சாவு, சம்பவத்துடன் தொடர்புடைய 15 குழந்தைகள் மற்றும் 5 பெரியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவ உளவியல் அவசர குழு உடனடியாக சம்பவ இடத்தில் செயல்படுத்தப்பட்டது.

இந்த சோகமான சம்பவம், படகு பயிற்சி மற்றும் குளப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் மீதான கவனத்தையும், போதைப் பொருள் பயன்படுத்தும் நிலையில் மீனவர்கள் படகில் செல்வதைத் தடுக்கவும் கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்