Paristamil Navigation Paristamil advert login

இன்றுவரை இயங்கிவரும் - பிரான்சின் முதல் நூலகம்!

இன்றுவரை இயங்கிவரும்  - பிரான்சின் முதல் நூலகம்!

30 சித்திரை 2016 சனி 09:26 | பார்வைகள் : 20174


 
 
இன்று பிரான்சில் உள்ள ஒரு நூலகம் பற்றி தெரிந்துகொள்ளலாம்...! Bibliothèque Mazarine என அழைக்கப்படும் இந்த நூலகம் தான் பிரான்சில் கட்டப்பட்ட முதல் நூலகமாகும். வாருங்கள்.. தொடர்ந்து மேலும் சில தகவல்களை தெரிந்துகொள்ளலாம். 
 
* 17ம் நூற்றாண்டில்  கட்டப்பட்ட  இந்த நூலத்தில் தான், பிரான்சின் பண்டைய கால மிக முக்கியமான புத்தகங்கள் இருக்கின்றன. பல அரிய நூல்கள், கை எழுத்து பிரதிகள் உட்பட பல பொக்கிஷமான நூல்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. 
 
* Cardinal Jules Raymond Mazarin என்பவர் உருவாக்கிய நூலகம். இதுவே பிரான்சின் முதல் நூலகமும், இன்றுவரை இயங்கிக்கொண்டிருக்கும் பழமைவாய்ந்த நூலகமுமாகும். 
 
* இந்த நூலகத்தில் 1653ம் ஆண்டு, ஒரு திருட்டுச்சம்பவம் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான நூல்கள் அப்போது காணாமல் போய்விட்டன.  அவற்றை இன்றுவரை  திரும்ப பெற முடியாமல் போய்விட்டது. 
 
* பின்னர் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிது புதிதாக நூல்கள் சேர்க்கப்பட்டு வந்தது. இன்று ஆறு இலட்சம் புத்தகங்களை கொண்டு பிரான்சின் மிகப்பெரும் நூலகமாக திகழ்கிறது. 
 
* முதன் முதலாக அச்சடிக்கப்பட்ட 'Gutenberg Bible' நூல் இந்த நூலகத்தில் தான் இருக்கிறது. பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது. 
 
* பிரான்சின் பொக்கிஷங்களான பல முக்கிய கையெழுத்து பிரதிகள் இங்கு பாதுகாக்கப்படுகிறது. மொத்தமாக 4600 கையெழுத்து பிரதிகள் இங்கு இருக்கின்றன. 
 
* சனி, ஞாயிறு தவிர்த்து மீதி நாட்களில் எப்போதும் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் இந்த நூலகம். மேலும் வருடத்தின் ஓகஸ்ட் மாதத்தின் முதல் திகதியில் இருந்து, 15ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும். 
 
* 23 Quai de Conti, 75006 Paris, France. மேற்படி விலாசத்தில் இயங்கி வருகிறது இவ் நூலகம். 
 
 
உலகின் தலை சிறந்த நூலகங்களில் ஒன்றாக திகழும் இந்த நூலகத்தை நீங்கள் அவசியம் பார்வையிட வேண்டும். 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்