மக்ரோனிசத்துக்கு எதிரான கண்டனம்!!

25 வைகாசி 2025 ஞாயிறு 14:33 | பார்வைகள் : 744
மோடெம் கட்சியின் இரண்டாம் தலைவர் மார்க் பெஸ்னோ (Marc Fesneau), மையக் கட்சி தலைவர்கள் வலதுசாரி மற்றும் உள்உளவியலியல் (சéபயடநைn) பிரச்சனைகளில் 'அதிகப்படியான பதட்டத்தை' ஏற்படுத்துவதாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிரங்கமாக,கண்டனம் தெரிவித்தார்.
இது 2017ஆம் ஆண்டு மக்ரோனிஸம் என அறியப்படும் மையவாத இயக்கத்தின் அடிப்படை உத்தியை எதிர்த்த நம்பிக்கைத் துரோகம் என அவர் கூறுகிறார்.
இன்று மையக் கூட்டணியில், வலதுசாரி அல்லது தீவிர வலதுசாரி கட்சிகளின் கருத்துக்களை ஏற்று பேசுகிறார்கள். இது தான் நாம் மக்ரோனுடன் 2017-ல் தொடங்க விரும்பிய இயக்கமா? இதுதான் மையவாதமா? எனக் கேட்டார் அவர்.
கேப்ரியல் அத்தால்ல் (ரெனசோன்ஸ் தலைவர்), எதுவார்ட் பிலிப் (Horizons) மற்றும் ஜெரால்ட் தார்மனனின் (உள்துறை அமைச்சர்) ஆகியோரின் கடுமையான உள்நாட்டு சட்டங்களைப் பற்றியும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெஸ்னோவின் கூற்றுப்படி, இந்தக் கருத்துகள் பெரும்பாலும் ஐரோப்பிய சட்டங்களையும், பிரான்சின் அரசியலமைப்பையும் மீறுகிறது, மேலும் அவை சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும்.
2027 தலைமை தேர்தலுக்கான ஆசைகள் காரணமாக, இவர்கள் எல்லை மீறுகின்றனர். ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது. அவர்கள் எப்போதும் சரியானகட்சிகளையே தேர்ந்தெடுப்பார்கள்.இது அரசாங்கத்தின் தவறு மட்டுமல்ல, ஆதரவு கொடுத்த நாமும் பொறுப்பேற்க வேண்டும்.
பிரதமரின் அதிகார எல்லைகள் தற்போது குறைந்துள்ளன. இந்தச் சீர்கெட்டிய நிலைகளை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு எமக்கு உரியது
மத்திய அணியில் பலர் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். நாமெல்லாம் ஒன்றிணைந்து, நியாயமான பாதைக்கு திரும்ப வேண்டும்»
என மார்க் பெஸ்னோ அழைப்பும் விடுத்துள்ளார்
பிரதமர் பிரோன்சுவா பய்ரூ இந்த மையக் கட்சியான மொடெம் கட்சியைச் சேர்ந்தவர் என்பதும் மக்ரோனிற்கு ஆதரவ வழங்கிவரும் நிலையிலேயே பொம்மைப் பிரதமராக பய்ரூவை மக்ரோன் உருவாக்கி உள்ளார்.
மார்க் பெஸ்னோ, மக்ரோனின் அணியில் இருந்தாலும், தற்போது சில தலைவர்களின் வலதுசாரி நிலைப்பாடுகளை கடுமையாக விமர்சிக்கிறார். அவர், மையவாதத்தின் உண்மையான நோக்கமான, ஒற்றுமை, சமநிலை மற்றும் சட்டம் மீதான மரியாதையைக் காப்பாற்ற, மக்ரோனிஸத்தை ஒழிக்க வேண்டும் என மார்க் பெஸ்னோ தெரிவித்துள்ளார்.